கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள்
கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள் 1. தமிழக வரலாற்றில் வரையறுக்கப்பட்ட கருதுகோளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. 2. சங்க காலத்தின் கால வரையறையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. 3. கீழடியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது. 4. கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை உணர்த்துகின்றது. 5. சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை காட்டுகின்றது. 6. வேளாண்மைத் துணைத் தொழிற்கூடங்கள், பானைத் தொழிற்கூடங்கள், ஆடைகள் தயாரிக்கும் நெசவுக்கூடங்கள் ஆகியவை இருந்துள்ளமையை அடையாளம் காட்டுகின்றது. 7. செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு 97 சதவீதம் சுண்ணாம்புச் சாந்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகின்றது. 8. தொழிற்கூடங்களுக்கு அருகில் குடிநீர்ப் பயன்பாட்டிற்கு உறை கிணறுகள் அமைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது. 9. எளிய மக்கள் தங்களுக்குரிய பானைகளில் தங்களின் பெயர்களைத் தாங்களே தமிழி ...