பண்டைய தமிழரின் உணவுப் பழக்கம்

 பண்டைய தமிழரின் உணவுப் பழக்கம்

இனக்குழு

பண்டைத் தமிழர் இனக்குழு வாழ்க்கை முறையைப் பின்பற்றினர்.

இக் காலத்தில் உணவுத் தேடலே முதன்மை என்பதால் கிழங்கு, காய், பழம் முதலியன உணவாகப் பயன்பட்டன.

வேட்டையாடுதல்

அது போதாமை ஏற்பட்டபோதுவேட்டையாடி விலங்குகளைப் பச்சையாகவும், விலங்குகளையும் உணவாகப் பயன்படுத்தினர். 

அரிசிச் சோறு

அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர்.

அவர்கள் புழுங்கல் அரிசியையே உண்பது வழக்கம்.

அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டி உலையிலிட்டனர்.

அவர்கள் வரகையும் சாமையையும் சமைத்து உண்டனர்.

பழஞ் சோற்றையும் மக்கள் உண்பதுண்டு.

கஞ்சி

அரிசி, கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்பு ஆகியவற்றை பாலில் கூட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடிப்பார்கள்.

காய்கறி

சோற்றோடு காய்கறி வகைகளையும் சமைத்து உண்பர்.

காய்கறிக்குக் கடுகு தாளிப்பார்கள்.

மிளகும் புளியும் உப்பும் உணவில் சேரும்.

புளி வகை

மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப் புளிக்க வைத்து, அதைப் பிழிந்து பயன்படுத்துவதுர்

கலாபழப் புளி, தொடரி புளி, நாவற்பழப் புளி ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

புளிக்க வைத்த மாவை கரைத்து புளி ஆக்குவார்கள்

பொரித்தல்

கொம்மட்டி மாதுளங்காயை அரிந்து, அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து, கறிவேப்பிலை கூட்டி, பசுவெண்ணெயில் அதைப் பொரிப்பார்கள்.

ஊறுகாய்

வடுமாங்காய் ஊறுகாய் அக் காலத்திலேயே உண்டு.

பழந்தமிழர் புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த காடியைப் பெரிதும் விரும்பினர்.

பிற உணவுகள்

பலாப்பழம், இளநீர், வாழைப் பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக் கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றையும் பண்டைய தமிழர் உண்டனர்.

பல விதமான பணியாரங்கள் செய்யப்பட்டன.

புளிச்சோறு

வேடர்கள் விரும்பி உண்ட உணவு புளிச்சோறு.

பால் உணவு

வெண்ணெய் பாலை தோய்த்து திரட்டும் வழக்கம் அந்நாளிலேயே இருந்துவந்தது.

வெண்ணையைப் பதமாகக் காய்ச்சி நெய் எடுத்து சோற்றில் வார்த்து உண்பார்கள்

ஊன் சோறு

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் இருந்தது.

வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமா, மீன் வகைகள், நண்டு, ஈயல்,கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியை தனியாகவோ, பாலும் அரிசியும் கூட்டியோ சமைப்பார்கள்

 ஊன்சோறு என்பது இப்போது புலவு அல்லது புலால் என்று வழங்கப்படுகிறது.

முஸ்லிம்கள் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறிய பிறகு அது பெருவழக்கானது. ஊனை நெய்யில் பொறிப்பர்

புளிங்கறி

புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிங்கறி சமைப்பதுண்டு.

ஆண் பன்றிக் கறி

நெல்லை இடித்து ஆண் பன்றிக்குத் தீனியாகக் கொடுப்பர்.

அதைக் கொழுக்க வைப்பர்.

அதனை பெண்பன்றியோடு சேரவிடாமல் தனியாக வளர்த்து அதன் ஊனைச் சமைத்து உண்பர்.

உப்புக் கண்டம்

ஊனை உப்புக் கண்டம் போடுவதுண்டு.

இரும்புக் கம்பியில் கோர்த்து நெருப்பில் வாட்டி உண்பார்கள்.

கள்

கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் காணப்பட்டது.

 மன்னர், பாணர், புலவர்,கூத்தர், பொருநர், விறலியார் அனைவரும் மது உண்டனர்.

கள் வகைகள்

பனங் கள், தென்னங் கள், ஈச்சங் கள் ஆகிய கள் வகைகள் காணப்பட்டன.

அரிசி, புளித்த சோற்றுக் காடி முதலியவற்றைக் காய்ச்சி வடித்த மதுவையும் உண்டனர்.

 யவனர்கள் கப்பலின் வழிவந்த தேறலையும் அவர்கள் விரும்பி உண்டனர்.

கள்ளின் சுவையைக் கூட்டுதல்

 தேறலின் சுவையையும் அதன் வெறியைத் தூண்டுவதற்காக கண்ணாடிக் குப்பிகளிலும் மூங்கில் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர்.

இதனைப் பாம்பின் கடிக்கும் தேளின் விஷப் பரவலுக்கும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர்.

கள்ளுக்கு இன்சுவையும் நறுமணத்தையும் ஊட்டுவதுண்டு.

கள்ளுண்டவர்கள் புளிச்சுவையை விரும்பி, பலாப்பழம் தொடரி பழம் நாவல் பழம் முதலிய பழங்களைப் பறித்து உண்பர்.

வடிகட்டுதல்

சுள்ளைப் பனை/தென்னைப் பன்னாடையால் வடிகட்டுவர்.

இரட்டைப்பிடி சாடி

யவனர் இரட்டைப் பிடிச் சாடிகளில் மரக்கல வழிக் கொணர்ந்த மதுவைத் தமிழர் உண்டு வந்ததற்குச் சான்றுகள் அரிக்கமேட்டுப் புதைவுகளில் கிடைத்துள்ளன.

இதனால் விளையும் தீமைகளைக் கருத்தில் கொண்டுதான் அறநூல்கள் கள்ளுண்ணுவதை வன்மையாகக் கண்டிக்கின்றன


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்