காளமேகப் புலவர் - கார்'என்று பேர்படைத்தாய் - தனிப்பாடல்
காளமேகப் புலவர் - கார் ' என்று பேர்படைத்தாய் காளமேகப் புலவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இரு பொருள்படவும் நகைச்சுவை தோன்றவும் கவிபாடுவதில் வல்லவர். வைணவ சமயத்தில் பிறந்த இவர் , திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் காதல் கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். மேகங்கள் மழை பொழிவது போன்று கவிமழை பொழிவதால் இவர் காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். சிறந்த ஆசுகவி பாடும் வல்லமை மிக்கவர். இரட்டுற மொழிதல் , சித்திர மடல் போன்ற பாடல்களை இயற்றியுள்ளார். கார் ' என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது ; ' நீர் ' என்று பேர்படைத்தாய் கொடுந்தரையில் வந்ததற்பின் ; வார்ஒன்று மென்முலையார் ...