திருப்பாவை-ஆண்டாள் -மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்-யசோதை இளஞ்சிங்கம்-பொருள் - விளக்கம்
திருப்பாவை-ஆண்டாள் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலோன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே , நமக்கு பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள் மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களே எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடச் செல்வோம் . கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபனின் மகனும் , அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டியின் சிங்கம் போன்ற மகனும் ஆவான். அவன் கருமை நிறத்தவன் . தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவன். சூரிய , சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் முகத்தை உடைய...