வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க பதப்பொருள் : மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளும் இறைவன் திருவடிகள் மேம்படுக; கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரச் செய்யும் சிறப்புடையவனது திருவடி மேம்படுக.