கற்பு வாழ்க்கை
கற்பு வாழ்க்கை
கற்பு = திருமண வாழ்க்கை
அகத்திணையில் திருமண வாழ்க்கை என்பது கற்பு எனப்படுகிறது.
தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களின் திருமணத்திற்கு உடன்படுவர்.
திருமண ஏற்பாடுகள்
திருமணம் ஒருநல்ல நாளில் நடைபெறும்.
தீயகோள்கள் விலகி நிலாவும் ரோகிணியுடன் சேர்ந்த நல்ல நாளாக இருக்க வேண்டும்.
விடியற் காலையில்தான் திருமணம் நடைபெறும்.
திருமணபந்தலின் கீழ் புதுமணல் பரப்பப்படும்.
மாலைகள் தொங்க விடப்படும்.
அழகிய விளக்குகள் ஏற்றப்படும்.
வதுவை நாள் மணம்
வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களி எடுத்து தம் தலையில் சுமந்து வந்து சிறு மண்டை (மண் பானை)என்ற அகன்ற வாயுள்ள களத்தில் ஊற்றுவார்கள்.
குழந்தைகளைப் பெற்ற மங்கல மகளிர் நான்கு பேர் கூடிய சிறு மண்டையில் உள்ள தண்ணீரில் பூக்களையும் நெல்லையும் இட்டு அந்தத் தண்ணீரை முகந்து மணமகளை நீராட்டுவர் .
இச்சடங்கு வதுவை நான் மனம் எனப்படும்.
வாழ்த்து
அப்போது அப்பெண்டிர், "இவள் கற்பு நெறியில் நின்று, கணவனை விரும்பிப் பேணும் துணைவியாவாள்" என்று வாழ்த்துவர்.
மணமகளின் பெற்றோர் 'பெரிய ஓர் இடத்துக்குக் கிழத்தியாக ஆவாய்' என்று வாழ்த்தி அவளை மணமகனுக்குக் கொடுப்பர்.
உணவு
பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கலை மணவிழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்குவர்.
இறைச்சியும் நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றையும் வழங்குவது உண்டு.
கடவுள் வழிபாடு
திருமணம் தொடங்கும் முன்னர் கடவுள் வழிபாடு நடைபெறும். மணமுழவு முழங்கும்.
மாலை
வெண்மையான நூலில் வாகை இலைகளையும் அறுகம்புல் கிழங்குகளையும் கோர்த்த மாலையை மணமகள் அணிந்து கொள்வாள்.
திருமணத்தின் போது மங்கல நாண் கட்டும் வழக்கம் அக்காலத்தில் இல்லை.
ஆரியப் பண்பாடும் தாலியும்
ஆரியப் பண்பாட்டுக் கலப்புக்குப் பிறகு தோன்றிய சிலப்பதிகாரத்திலும் தாலி கட்டப்படவில்லை.
ஆனால் தமக்குத் திருமணம் ஆனதைத் தெரிவிப்பதற்காக அக்காலத்துப் பெண்கள் மங்கல அணி ஒன்று அணிந்தனர்.
திருமண நாள் அன்று அம்மங்கல அணியை ஊர்வலமாகக் கொண்டு வரும் வழக்கம் இருந்திருக்கிறது.
புத்தாடை
திருமண நாளன்று இரவு மணமக்கள் மணவறையில் கூட்டப் பெறுவர்.
அங்கு மணமகள் புத்தாடையால் தன் உடல் முழுவதும் போர்த்துக் கொண்டிருப்பாள்.
சங்ககாலத்து திருமணவிழா பற்றிக் கூறும் அகப்பாட்டுகள் இரண்டிலும் புரோகிதன் ஒருவன் மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல்லை.
பரத்தை
பரத்தையர் ஒழுக்கம் குறிப்பிடப் பட்டுள்ளது.
தலைவன் பரத்தையர் பிரிவில் ஈடுபடுவான் .
பிரிவின் காலத்தில் தலைவி ஊடி இருப்பாள் .
ஊடல் தீர்த்து வைக்கும் வாயில்
தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி,இளையர், விருந்தினர் கூத்தர், விரலியர், அறிவர், கண்டோர் ஆகிய அனைவரும் ஊடல் தீர்த்து வைப்பர் .
கல்வி – மூன்றாண்டுகள்
திருமணமான பிறகு கணவன் கல்வி கற்கவோ, பொருள் தேடவோ, தன் மனைவியை விட்டுப் பிரியலாம். கல்விக்காகப் பிரிவது மூன்று ஆண்டுகள். அரசு பணி – ஓராண்டு
அரசின் ஆணையின் காரணமாக, மன்னனுடைய போர்ப் பணியை மேற்கொண்டோ, பொருள் தேடவோ கணவன் தன்மனைவியை விட்டுப் பிரிய நேர்ந்தால் அது ஓராண்டுக்கு மேல் நீடிக்கக் கூடாது.
இப்பிரிவுக் காலத்தில் தலைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.
மக்கட்பேறு
இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக அமைவது நன்மக்கட்பேறு .
மக்கட்பேறு கொண்ட பெண்ணே அக் குடும்பத்தின் தலைவி ஆகிறாள்.
புறநானூறு கூறும் அறம்
அவர்களுக்குப் போர்ப் பயிற்சி தருவது தந்தையின் கடமை. அதைத்தான் 'சான்றோன் ஆக்குதல்' எனப்பட்டது. வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லருக்குக் கடமை. நன்னடை வழங்குதல் வேந்தனுக்குக் கடமை. பிறந்த பிள்ளைக்குரிய கடமை போரில் யானைகளைக் கொல்வதுதான் என்பது புறநானூறு கூறும் அறமாகும்.
உடன்கட்டை ஏறுதல்
கணவனை இழந்த பெண் அக் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
கைம்மை நோன்பு
கைம்மை நோன்பு நோற்கும் வழக்கமும் பெண்கள் மேற்கொண்டு இருந்தனர்.
கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை, தண்ணீர் சோற்றைப் உண்பர்.
அதில் அரைத்த எள்ளையும் புளியையும் கூட்டி வெந்த வேளைக் கீரையுடன் உண்ணுவர்.
வெறுந் தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.
தலையை மழித்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக