களவு வாழ்க்கை

           களவு வாழ்க்கை

களவு

அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத் தலைவன் என்றும் காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபு.

மணப்பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் தாமாகவே கூடி அல்லது பிறரால் கூட்டப்பட்டு கணவன் மனைவி ஆவார்கள்.

தாமாகக் கூடும் கூட்டம் களவு எனப்படும்.

அவர்களுடைய திருமணம் எந்த இடையூறும் இன்றி நடைபெற காதலனின் தோழனும் காதலியின் தோழியும் துணைநிற்பர்.

மடலேறுதல்

தான் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காத ஆண்மகன் சில சமயம் மடலேறுவதுண்டு.

பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து, அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி

ஒன்றைத் தன் கையில் ஏந்திக் கொள்வான்.

இந்த ஊர்தியைத் தெருத் தெருவாக இழுத்துச் செல்லும்போது, உடலில் குருதி வெளிப்படும்.

பெண்ணின் பெற்றோர் அவனுக்கே அப்பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பார்கள்.

பெண்கள் மடல் ஏறும் வழக்கம் இல்லை.

திருமங்கை ஆழ்வார்

பிற்காலத்தில் திருமங்கை ஆழ்வார், தலைவி ஒருத்தி தலைவன் பிரிவால் 'காதல் கைமிக்கு மடலூரத் துணிந்தாள்' என்று புதுமையாகப் பாடுகின்றார்.

திருமணம்

உடன் போக்கு

தலைமக்கள் இருவரும் தங்கள் காதலுக்கு இடையூறு நேர்ந்தால் சேர்ந்து ஊரை விட்டு வெளியேறி விடுவர்.

அவர்களது உறுதியைக் கண்டு பெற்றோர் திருமண முடித்து வைப்பதும் உண்டு.

மொத்ததில், களவு ஒழுக்கம் இரண்டு மாத காலத்துக்கு மேல் நீடிக்க கூடாது என்பது இலக்கணம் கூறும் செய்தி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்