சேரர்
சேரர் சேரர் பண்டைத் தமிழகத்தில் புகழுடன் விளங்கியவர்கள் தமிழகத்தின் மேற்குக் கரை சேர நாடு ஆகும் அந்த நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் சேரர் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும் , வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. வேணாடு , குட்டநாடு , தென்பாண்டி நாடு ஆகிய இன்றைய கேரளாவும் சேரர்களால் ஆளப்பட்டது . தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை அதாவது அமராவதி ஆற்றின் கரையிலுள்ளது . முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவும் , சங்க காலச் சேரர்களைப் பற்றி ய செய்திகள் சிறிதளவும் காணக்கிடைக்கின்றன . சேர அரசர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்த...