தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி- பொருள்
தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி 1. அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில் சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 2. அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச் சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 3. ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான் பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 4. ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 5. ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங் கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. பொருள் : 1. முதலும் முடிவும் இது தான் என்று அளவிட முடியாத அருட்பெருஞ்சோதியான இறைவன் என் அறிவில் தங்கி , எனக்கு அருள் செய்வாரோ சொல் பைங்கிளியே! 2. பைங்கிளியே! என் மனதின்கண் பொருந்தியிருக்கின்ற இறைவனிடம் நீ சென்று , என் து...