முல்லைப்பாட்டு பாடலும் விளக்கமும்
முல்லைப்பாட்டு பாடலும் விளக்கமும் பத்துப்பாட்டில் சிறிய நூல் இது .103 அடிகளைக் கொண்டது . ஆசிரியப்பாவால் அமந்தது . அக நூல் . பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுதடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகக் கருதப் படுகின்றது . ஆனாலும் தலைவன் பெயர் குறிப்பிடப் படவில்லை . பாடியவர் : காவிரி பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் . பாடப்பட்டவன் :தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் திணை : முல்லை மால்போலத் தோன்றும் மழைமேகம் நனந்தலை உலகம் வளைஇ , நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல , நிமிர்ந்த மாஅல் போல , பாடுஇமிழ் பனிக்கடல் பருகி , வலன் ஏர்பு , கோடு கொண்டு எழ...