நாட்டுச் சருக்கம் - சுரமை நாட்டின் சிறப்பு -சூளாமணி- விளக்கம்
நாட்டுச் சருக்கம் - சுரமை நாட்டின் சிறப்பு மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர் இஞ்சிசூழ் அணி நகர் இருக்கை நாடது விஞ்சைநீள் உலகுடன் விழாக் கொண்டன்னது துஞ்சுநீள் நிதியது சுரைமை என்பவே. பொருள்: மேகங்களால் சூழப் பெற்ற அரிய மணிகளை உடைய கோடிக்குன்றம் என்னும் மலையைத் தன் கைகளால் தூக்கிய திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவன் திவிட்டன். அவன் அரசு வீற்றிருக்கின்ற , மதில்கள் சூழ்ந்த அழகிய போதனம் என்னும் நகரம் சுரமை நாட்டில் உள்ளது. அது தேவர் உலகத்தைக் காட்டிலும் செல்வவளத்தால் சிறப்புடைய நாடாகக் காட்சியளிக்கின்றது. சொன்னநீர் வளமைத் தாய சுரமை நாட்டகணி சார்ந்து மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட பொன்னவிர் புரிசை வேலிப்போதன மென்ப துண்டோர் நன்னகர் நாகலோக நகுவதொத் தினிய தொன்றே. பொருள் : நீர் வளமை உடைய சுரமை நாட்டின் நடுவில் அமைந்துள்ளது போதன மாநகரம். அந்நாட்டு அரசன் வீற்ற...