இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொழிப் பயிற்சி

  மொழிப் பயிற்சி   1. வாக்கிய வகை(தொடர் வாக்கியம் , தனி வாக்கியம் , கூட்டு வாக்கியம்) 2. இரு வழக்குகள் (பேச்சு , எழுத்து) 3. எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் 4. ஒருமை , பன்மை மயக்கம் 5. திணை , பால் , எண் , இட வேறுபாடு 6. நால்வகைச் சொற்கள் (பெயர் , வினை , இட , உரி) 7. அகரவரிசைப் படுத்துதல் வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, 1தனிவாக்கியம் 2)தொடர்வாக்கியம் 3) கலவை வாக்கியம் ( அ )கூட்டு வாக்கியம் தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும். (எ.டு.) பாரி   வந்தான். பாரியும் கபிலனும் வந்தனர். தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும். (எ.டு.)   தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள். கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும். (எ.டு.) தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் மு...

திருமந்திரம் - திருமூலர்

  திருமந்திரம் - திருமூலர் அன்புடைமை பாடல் - 1 அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. விளக்கம் அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு , சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின் , அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார். பாடல்   - 2 பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே . விளக்கம் பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்த...

பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை- விளக்கம்

  பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை பாடல் 1.     மாதா பிதாவை வணங்கு – நாளும் ஆதாரமாகவே யவர்சொல்லுக்கிணங்கு   2.     தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர் சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் நில்லாது   3.     மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும் பாதகரைச் சுற்றும் பாவம் அநேகம்   4.     பெற்றவர் நேசத்தைத் தேடு அவர் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு   5.     தாய்தந்தைக் குதவாத பிள்ளை – தனது ஆயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை   6.     கட்டியுனை ஆளாக்க தாமே முன்பு   பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே   7.     உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு செய்யும் பிள்ளையைத் தன்பிள்ளை யேபழிவாங்கும்   8.     கடலைப் போல்மாதா சகாயம் – அதற்கு உடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ஞாயம்   மதியிது மதியிது பெண்ணே – புண்ணிய வதியல்லவோ நல்ல மகராசி கண்ணே.   விளக்கம். 1. பெற்ற தாயையும் தந்தையையும் எப்போதும் வணங்க வேண்...

குணங்குடிமஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி - பொருள் விளக்கம்

  குணங்குடிமஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி பாடல்கள்   1.     அண்ட புவனமென்று ஆடுதிருக் கூத்தினையான்   கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!   2.     ஆதியா யாண்டவனா யஃபாதுவாய் நின்றபெருஞ்   சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!   3.     வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை   ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!   4.     அண்ட புவனம் உடன்ஆகாச மென்றுசும்பிக்   கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!   5.     நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம்   பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!   6.     பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்   ரா ரிருந்துபல னாமோ பராபரமே!   7.     மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே   பாராயோ வையா பகராய் பராபரமே!   8.     ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத்   தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!   9.  ...