மீன்கள்- வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ- தமிழ்ஒளி- பொருள்
மீன்கள் - வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ- தமிழ்ஒளி (இயற்பெயர்: விசயரங்கம் , 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிஞனின் காதல் நிலை பெற்ற சிலை வீராயி மே தின ரோசா விதியோ வீணையோ கண்ணப்பன் கிளிகள் புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்) கோசலக் குமாரி வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ-ஏழை வாழும் குடிசையின் பொத்தல்களோ ? மாநில மீதில் உழைப்ப வர்கள்-உடல் வாய்ந்த தழும்புக ளோஅவைகள் ? செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம்-அங்குச் சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ ? சொந்த உரிமை இழந்திருக்கும்-பெண்கள் சோக உணர்ச்சிச் சிதறல்களோ ? இரவெனும் வறுமையின் கந்தல்உடை-தனில் எண்ணற்ற கண்களோ விண்மீன்கள் ? அருந்தக்கூ ழின்றியே வாடுபவர்-கண்ணீர் அருவித் துளிகளோ வான்குன்றிலே ? காலம் எழுதும் எழுத்துக்களோ-பிச்சைக் காரர் இதயத்தின் விம்மல்களோ ? நீலக் கண்ணாடியின் கோட்டையிலே-மின்னல் நெளிவை இறைத்திட்ட அற்புதமோ ? வெய்யில் அரசாங்கம...