திருத்தில்லைப் பதிகம் – திருஞானசம்பந்தர்-கற்றாங்கு எரி ஓம்பி -பொருள் விளக்கம்
திருத்தில்லைப் பதிகம் – திருஞானசம்பந்தர் திருமுறை : முதல் திருமுறை 80வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் திருஞானசம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர். தேவார மூவருள் முதலாமவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் , சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத இருதயர் , தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது , தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும் , அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார் , சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம் , தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும் , அப்போது உமாதேவியார் , சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அறிவுசேரர் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்க...