இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பிரெஞ்சு காலனித்துவத்தின் தோற்றம்-பிரெஞ்சு

    இந்தியாவில் பிரெஞ்சு காலனித்துவத்தின் தோற்றம் 16 ஆம் நூற்றாண்டில், வர்த்தக நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு பயணங்கள்  அனுப்பப்பட்டதே   இந்தியாவிற்கான முதல் பிரெஞ்சு முயற்சி ஆகும் . ஆனால் அவை அனைத்தும் வெற்றிபெறவில்லை. XIV லூயிஸ்   ஆட்சியின் போது அவரின்   புகழ்பெற்ற மந்திரி கோல்பர்ட் 1664 இல்  Compagnie des Indes Orientales (French East India Company) க்கு அடித்தளம் அமைத்தார். அதில்  மன்னரும்   ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். ஃபிராங்கோயிஸ் கரோன் (பிரெஞ்சு ஆளுநர்) தலைமையில் இந்தியாவுக்கான முதல்  பயணம் 1667 இல் சூரத்தை அடைந்து முதல் வர்த்தக நிலையத்தை சூரத்தில்  நிறுவியது. 1669 ஆம் ஆண்டு மசூலிபட்டிணத்தில்   மற்றொரு தொழிற்சாலை நிறுவப்பட்டது. 1673 ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு அருகிலுள்ள சந்தர்நாகூரில் டவுன்ஷிப்  நிறுவப்பட்டது. அதே ஆண்டு, பிரெஞ்சுக்காரர்கள் (பிரான்கோயிஸ் மார்ட்டின் பாண்டிச்சேரியின்  பகுதியை பிஜாப்பூர் சுல்தானிடம் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோடி  என்பவனிடமிருந்து பு துச்சேரியை தானமாக பிரான்ச...