திணை வாழ்வியல்
திணை வாழ்வியல்
வரலாற்றுக் காலம்
தமிழகத்தின் வரலாற்றுக் காலம் என்று சங்ககாலத்தைக் குறிப்பிடலாம்.
இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழுவளர்ச்சி பெற்றிருந்தது.
பாண்டியர், சோழர்,சேரர் என் முப்பெரும் மன்னர்கள் அரசாண்டனர்.
பாண்டியரின் தலைநகரம் மதுரை, சோழரின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம் (புகார், பூம்புகார் என்பன வேறுபெயர்).
சேரரின் தலைநகரம் வஞ்சி என்பது.
தமிழ்நாடு - தமிழர்
தமிழ்மொழி பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் இருந்ததால் தமிழ்நாடு என்றானது.
அம்மொழி பேசியோர் தமிழர் என்றும் பெயர் பெற்றனர்.
தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர் இனம் மூன்றும் தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது.
சங்கஇலக்கியங்கள்
சங்கஇலக்கியங்கள் துணையோடுதான் தமிழரின் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துகொள்ள முடியும்.
மூவேந்தர் மட்டுமல்லாமல் குறுநில மன்னர்கள், சிறுமன்னர்கள், பெருங்குடி மன்னர்கள் என ஆட்சியாளர்கள்
- மக்கள்- புலவர்கள் முதலியன குறிப்பிடத்தக்க பண்பாட்டு அடையாளங்களை சங்கஇலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும்.
முதற்பொருள்
இடமும் காலமும் முதன்மையான இடம் வகிக்கின்றன. இவை முதற்பொருள் எனப்படும்.
நிலத்தின் மேல் விளங்கும் ஓரறிவு உயிர்முதல் ஆறறிவு உயிர்களும்
கருப்பொருள்
உயிரற்ற பொருட்களும் முதற்பொருட்களைச் சார்ந்து கருக்கொண்டு தோன்றுவதால் அவை கருப்பொருள் ஆகும்.
உரிப்பொருள்
அக்கால மக்களின் வாழ்வியல் செய்திகளைப் புலப்படுத்துவது உரிப்பொருள் எனப்படும்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் ஆகிய நான்கு திணைகளில் வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருளீட்டி வாழ்வர்.
காதலிப்பர், மணப்பர். இல்லறம் துய்ப்பர் .
இவ் ஒழுக்கங்கள் யாவும் மக்களுக்கே உரியன.
நானிலம்
முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் என்பதில் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனத் தமிழகம் பகுக்கப்பட்டு நானிலம் எனப்பட்டது.
பாலை
பாலை என்பது இயற்கை வளம் சிதைந்த குறிஞ்சியையும் முல்லையையும் குறிப்பிடுகின்றது.
ஆதலால் பிரிதல் என்பது அதன் உரிப்பொருள் ஆயிற்று.
பெரும் பொழுது
நிலம் போல காலத்தையும் பகுத்துள்ளனர்.
ஓராண்டினை ஆறு கூறுகளாகப் பிரித்து அதனைப் பெரும் பொழுது என்று கூறுவர்.
பெரும் பொழுது ஆறும் கார், கூதிர் (குளிர்) முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
சிறுபொழுது
ஒருநாளை ஆறுகூறாக்கி, அவற்றைச் சிறுபொழுது என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.
நாளின் ஆறு கூறுகளாவன: காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, வைகறை யாமம் .
'அகம்' 'புறம்'
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து,மணந்து,இல்லறம் நடத்தி வருவது 'அகம்' .
பலவகையான ஒத்த தன்மைகள் கொண்ட ஒருவனும் ஒருத்தியும் கூடும் காலத்தில் பிறப்பது இன்பம். அது இன்னது
என்று சொற்களால் விளக்க முடியாது அவர்கள் உள்ளத்தால் உணர முடியும். அத்தகைய இன்பம் அகம் எனப்பட்டது.
மக்கள் அன்றாட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் போரிலும் ஈடுபடுவதைப் 'புறம்'.
இவை அனைத்தும் இயற்கையுடன் இயைந்த பண்டைய தமிழரின் சிறந்த பண்பாடாகும்.
இதனையே, திணைக் கோட்பாடு என்றும் திணை வாழ்வியல் என்றும் கூறுகிறோம்.
திணை வாழ்வியலின் நிலைகள்
1.களவு வாழ்க்கை
2. கற்பு வாழ்க்கை
3.உணவு
4. அணிகலன்கள்
5.வாணிகம்
6.விளையாட்டுகள்
என ஆறு நிலைகளில் அறியலாம்.
சங்க இலக்கியங்கள்- அகப்பொருள்
சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவை அகப்பொருளையே பேசுகின்றன.
எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்ந்தவை.
கருத்துகள்
கருத்துரையிடுக