வண்மையும் வறுமையும் - தமிழின்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை
தமிழின்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை ரா.பி. சேதுப்பிள்ளை தமிழறிஞர் , எழுத்தாளர் , வழக்குரைஞர் , மேடைப்பேச்சாளர் என்ற பன்முகம் கொண்டவர். இவரது பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950 ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்றும் விருது வழங்கியது. இவரது தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது. அந்நூலில் அறிவும் திருவும் என்ற ஐந்தாம் பிரிவில் காயும் கனியும் , சேரனும் கீரனும் , காரியும் மாரியும், அழகும் முத்தும் மற்றும் வண்மையும் வறுமையும் என்ற ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வண்மையும் வறுமையும் பழந் தமிழ்நாட்டு வள்ளல்களாய் விளங்கிய பாரியும் ஓரியும் , ஆயும் அதிகனும் , மலையனும் பேகனும் மாண்ட பின்னர் , முதிராத வளமுடைய முதிர ...