அயல்நாட்டுத் தொடர்புகள்,பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர் ,ஒரிசா பாலு ,முசிறித் துறைமுகம்

          பாடம் பத்து அயல்நாட்டுத் தொடர்புகள்

 

பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர்

நாடுகள் என்ற வரையறை தோன்றும் முன்னரே  பிறகும் தமிழர்கள் அரசமைக்கவும் வணிகம் மேற்கொள்ளவும் மதம் சார்ந்தும் பிற

நாடுகளுக்கு சென்றனர் .

கடல் கடந்து வாணிகம் செய்தோர் பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர் எனப் அழைக்கப்பட்டனர்.

பூர்வகுடிகள் 

கொரியாவில் தமிழ் நிலப்பெண் ஒருத்தி அரசியாக ஆண்டிருக்கிறாள்.

ஜப்பான், தாய்லாந்து, கனடா, உருகுவே, கலிஃபோர்னியா, மலேசியா போன்ற நாடுகளின் பூர்வகுடிகளாய்த் தமிழர் இருந்தனர்.

ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும் தமிழ்ப் பூர்வகுடிகள் இருந்துள்ளனர்.

சுமேரியம், பார்சி போன்ற மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன.

சுமார் 8,500 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தமிழும் தமிழரும் பரவியிருந்துள்ளனர்.

சுமார் 191 நாடுகள் தமிழ் பேசப்படும் இடங்களாக உள்ளன.

புலம் பெயர்ந்த தமிழர்

தமிழ்மொழியானது, உலகின் பிற தொன்மை மொழிகளில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலிருந்து கொரியா சென்ற 3 பெண்கள் நெல் விளைவித்தல்,கடலில் முத்துக் குளித்தல் முதலிய தொழில்களைக் கற்றுக்

கொடுத்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்திலும் அன்று முதல் இன்றுவரை, புலம் பெயர்ந்த தமிழர் இடம் பெற்றுள்ளனர் என ஆய்வாளர் ஒரிசா பாலு கூறுகிறார்.

கடலோடி

பழங்காலத் தமிழர் மேற்கே கிரீஸ், ரோமாபுரி, எகிப்து முதலாகக் கிழக்கே சீனா வரையில் கடலோடி வியாபாரம் செய்தனர்.

இவை மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், மெசபடோமியா, போன்ற நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.

ஆசிய நாடுகளில் தமிழகத்தின் ஏலம், மிளகு, இலவங்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை அக்காலத்தில் இருந்தது.

 

முசிறித் துறைமுகம்

முசிறித் துறைமுகம் கப்பல் உள்ளே வருவதற்குத் தேவையான ஆழமில்லாத துறைமுகம்.

ஆகவே யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் நின்றன.

தமிழர்கள் மிளகை ஏற்றிக் கொண்ட தோணிகளில் ஏறி கப்பலை அடைந்தனர்.

மிளகு மூட்டைகளைக் கப்பலில் ஏற்றி விட்டு, அதன் விலையாகப் பொன் கட்டிகளை வாங்கி வந்தனர். இதனை

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன் னொடுவந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி

என்று பரணர் கூறுகின்றார்.

 

தமிழகத்து வணிகர்கள் – அயல்நாடு

கடலில் உண்டான முத்துகள் , சங்குகளை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்கள், கப்பல் வணிகர்கள் கொண்டு வந்த நவதானியங்கள்,

உப்பு இட்டுப் பதப்படுத்திய மீன்கள்  ஆகியவற்றைத் தங்களது நாவாய்களில் ஏற்றிக் கொண்டு தமிழகத்து வணிகர்கள்

அயல்நாடுகளுக்குச் சென்று விற்றனர்.

அவற்றை அங்கு விற்றுத் திரும்பும்போது குதிரை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு திரும்பினர்.  இதனை ,

முழங்குகடல் தந்த விளங்கு கதிர்முத்தம் ஆயிரம் போழ்ந்து அறுத்த கண்ணேர் இலங்குவளை பரதவர் தந்த பல்வேறு கூலம்

என்னும் மாங்குடி மருதனாரின், மதுரைக் காஞ்சி வரிகள் புலப்படுத்துகின்றன.

கள்

யவனர் நல்ல மரக்கலங்களில் கொண்டு வந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணம் மிகுந்த மதுவை பிரகாசமான வளையல்கள் அணிந்த

இளம் பெண்கள் பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தந்தனர் .

அதனை நாள்தோறும் பாண்டிய மன்னன் பருகி மகிழ்ந்தான் . இத்தகவலை,

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கு இனிது 

ஒழுகுமதி ஓங்குவாள் மாற எனப் புறநானூற்றுப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்