தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார்-பாடலும்-பொருளும்- தமிழ்த் தெய்வ வணக்கம்
தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார் பெ. சுந்தரனாரால் எழுதப்பட்ட மனோன்மணீயம் என்னும் நூலில் தமிழ் தெய்வ வணக்கமாக வைக்கப்பட்டுள்ளது நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ் த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழத்துதுமே வாழத்துதுமே வாழத்துதுமே ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலை ஆடையாக அணிந்த நிலம் எனும் பெண்ணே, இப்பரத கண்டம் உனக்கு அழகு மிளிரும்...