கல்வியும் கலைகளும்,ஓவியக்கலை, புலிமான்கோம்பை,'கணக்காயர்' ஏரம்பம்

                                                    

                  பாடம் ஏழு கல்வியும் கலைகளும்

 

ஓவியக்கலை

வரலாற்றுக்கு முந்தைய பண்டைத் தமிழர், கல்வி கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை.

அவர்களது பட்டறிவின் வெளிப்பாடாக, குகைகளில் வரைந்துள்ள ஓவியங்களே, கற்பிக்கும் செய்தியாக அமைந்திருக்கக் கூடும்.

அதன் வழியாக ஓவியக்கலையும் வளர்ந்திருக்கிறது

கீழடி

பாமர மக்களும் கல்வியறிவு அல்லது எழுத்தறிவு பெற்றிருந்தனர்.  

சான்றாக கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்துகள்  பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் புலிமான்கோம்பையில் கல்வெட்டாகவும்

எழுத்துக்கள் இருப்பதைச் சான்றாகக் கொள்ளலாம்.

திருக்குறளில் கல்வி

திருக்குறளில் கல்வி குறித்துப் பேசும் அதிகாரங்கள் நான்கு உள்ளன.

குற்றமறக் கற்க வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும்; கல்வி உலகம் முழுவதையும் தன் சொந்த ஊராகவே கருத வைக்கும்; கல்விச்

செல்வம் ஒன்றே அழியாச் செல்வம்; கல்லாதவன் மேனி அழகு ஒரு பொம்மைக்கு நிகரானது; கல்வியை விடக் கேள்வியே மேம்பட்டது;

யார் எது சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை அறிவதே நல்லறிவு என வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.

சங்க காலம்- கல்வி

கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட சிலரின் உரிமையாக  இல்லை.

வறியோரும், மன்னரும்,எளிய  குடிமக்களும் ஆண்களும் பெண்களும் தேடிக் கல்வி பயின்றனர்.

இளைஞர்கள் திருமணமான பிறகும் தங்கள் மனைவியைப் பிரிந்து சென்றேனும் கல்விகற்பது உண்டு.

 

தந்தையின் கடமை

இளமையிலேயே கல்விப் பயிற்சி தொடங்கி விடுகிறது என்பதை 'இளமையில் கல்' என்றனர்.

அறிஞர் அவையின் வரிசையில் தன் மக்களை அமர  செய்து சான்றோ ஆக்குவதும் தந்தையின் கடமை என்று புறநானூறு கூறுகிறது.  

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ் பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே” என்பதனால் எந்த

வேறுபாடும் கல்வி கற்க இருக்கவில்லை.

உதவியும் உறுபொருள் கொடுத்தும் ஆசிரியரிடம் அடக்கமாகவும் அன்பாகவும் கல்வி கற்க வேண்டும்.  

கல்விப் பயிற்சிக்கு வறுமை நேர்ப்பகை ஆகும்.

கற்பிக்கும் ஆசிரியராக இருந்தவருக்குக் 'கணக்காயர்' என்று பெயர்

வழங்கியுள்ளமை அறியலாகிறது.

"கணக்காயர் இல்லாத ஊரும்...... நன்மை பயத்தல் இல்" என்று நூல்கள் கூறுகின்றன.

 

குலபதி

குலபதி நக்கண்ணனார் கிடங்கில் (தற்போது திண்டிவனம் ) என்ற ஊரில் சங்கப் புலவர் ஒருவர் இருந்தார்.

அவர் பத்து ஆயிரம் மாணாக்கருக்கு மேற்பட்ட மாணவர்களை ஒன்று கூட்டி, அவர்களுக்குக் கல்வி பயிற்றி வந்தார் (குறுந் 252) என்றும்

'குலபதி' என்ற பட்டம் அவருக்கு வழங்கப் பட்டிருந்தது என்ற செய்தி காணப்படுகிறது .

பள்ளி

கல்வி பயிற்றப்படும் இடம் 'பள்ளி' எனப்பட்டது என்றும் பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன .

மாணவர்கள் பனை ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.

மாணவர்கள் கல்வி பயிலும் போது, இரந்துண்ணும் வழக்கம் அக்காலத்தில் இருந்து வந்தது .

ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர்.

 

அக்கால வழக்கம்

கபிலர், பரணர், திருவள்ளுவர், நக்கீரர் போன்ற பெரும்புலவர் பலர் சங்ககாலத்தில் வாழ்ந்து வந்தனர்.

பாடல்களோ நூல்களோ தமிழ்ச் சங்கத்தார் முன்பு அரங்கேற்றம் பெற வேண்டும்.

சங்கப் புலவர்கள் அப் புலவரைப் புலமை நிரம்பிய சான்றோர் என ஒருங்கே ஒப்புக்கொள்ள வேண்டும்.

கூத்தும் இசையும் மன்னரின் முன் அரங்கேறின.

பல துறைகளில் புலமை சான்ற பேரறிஞர்கள் போலி ஆசிரியருக்கு அறைகூவல் விடுத்து, அவர்களுடன் சொற்போர் புரிந்து, அவர்களைத்

தோல்வியுறச் செய்து, நல்லறிவு புகட்டுவது அக்கால வழக்கமாகும்

 

இலக்கண நூல்கள்  

மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம், ஆகிய இலக்கண நூல்களையும் பயின்றனர்.

ஏரம்பம் என்றொரு கணித நூலையும் கற்றுள்ளனர். அந்த நூல் இப்போது மறைந்து போயிற்று.

கணிதத்தில் மிக நுண்ணிய அளவையும் மிகப்பெரிய அளவையையும் கையாண்டனர்.

மிக நுண்ணிய நீட்டல் அளவைக்குத் 'தேர்த்துகள்' என்று பெயர்.

இருண்ட அறை ஒன்றன் கூரையினின்றும் பாயும் ஞாயிற்றின் கதிரொளியில் மிதந்தோடும் துகள் போன்றது ஒரு தேர்த்துகள் ஆகும்.

மிகப்பெரிய எண் 'வெள்ளம்' எனப்பட்டது.

 

'கணிகள்'

மக்களுக்கு வானியல் புலமையும் இருந்தது.

வானவியல் புலவர்களுக்குக் 'கணிகள்' என்று பெயர்.

கோள்கள், அவற்றின் செலவுகள், நாண் மீன்கள், திங்களின் இயக்கம் ஆகியவற்றை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

இவற்றுக்குத் தனித்தமிழ்ப் பெயர் வழங்கி வருவதனால்  பழந்தமிழரின் வானவியல் அறிவை  நன்கு உணரலாம்.

கோள்கள்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகியவற்றைக் கோள்கள் என்கிறோம்.

இக்காலத்து வானவியல் ஞாயிறு ,திங்கள், ராகு, கேதுக்களையும் கோள்களின் பட்டியலினின்றும் நீக்கிவிடுகின்றது.

பூமியில் இருந்துகொண்டே கோள்கள் மற்றும்  ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததால் பூமி  நிலையாக

இருப்பதாகவும் மற்றவை அனைத்தும் பூமியை மையமிட்டுச் சுற்றி வருவதாகவும் கருதினர்.

ஆயினும் சூரிய, சந்திர கிரகணங்கள் உள்ளிட்ட அனைத்துக் கணிப்புகளுமே வியப்புக்குரியதாகும். மிகச் சரியாக அமைந்திருப்பது

ஆண்டு

தமிழரின் ஆண்டானது கதிரவனின் வடக்கு தெற்கு செலவைக் கணக்கிட்டு அறுதியிடப்பட்டது.

எனவே ஓராண்டில் 12 திங்கள்கட்கு மேல் இருக்காது.

சூரியன் எந்த இராசியில் எத்தனை நாள்  நிற்கின்றதோ அத்தனை நாள், அந்த இராசி என்றனர்.

எடுத்துக்காட்டாக சித்திரை நாண் மீனில் நிலவு முழுமையடையும் திங்களுக்குச் சித்திரை என்று பெயர்.

விசாகத்தில் சந்திரன் முழுமதியாகும் மாதத்துக்கு வைகாசி  என்று பெயர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்