இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை

             மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை    1.மாதா பிதாவை வணங்கு-நாளும் ஆதாரமா யவர்   சொல்லுக் கிணங்கு-மதி              2. தந்தைதாய் சாபம்பொல்    லாது-அவர் சிந்தைநொந்தால் மக்கள்      செல்வம் நில்லாது-மதி          3. மாதா பிதாவுக்கு      த்ரோகம்-செய்யும் பாதகரைச் சுற்றும்      பாவ மநேகம்-மதி               4. பெற்றவர் நேசத்தைத் தேடு-அவர் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு-மதி          5. தாய்தந்தைக் குதவாத      பிள்ளை-தன தாயுசும் வாழ்வு   மடியோடே கொள்ளை-மதி               6. கட்டியுனைவளர்க்க   நாமே-முன்பு பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே-மதி       7. உள்ளதாய...

தமிழன் இதயம் - நாமக்கல் கவிஞர்

              தமிழன் இதயம் -   நாமக்கல் கவிஞர்   பெயர்: வெ.இராமலிங்கம் பெற்றோர்: வெங்கடராமன் , அம்மணியம்மாள் பிறப்பு: 19.10.1888 இறப்பு: 24.8.1972 மனைவி: முத்தம்மாள் , சௌந்தரம்மாள் நாமக்கலில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வியினையும் , கோவை மெட்சிகுலேஷன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியினையும் , திருச்சி பிஷப் ஈபர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் நிறைவு செய்தார். முதல் மனைவிவயிற்று வலியில் தவறிவிட இரண்டாம் மணம் புரிந்து கொண்டார். இரு பெண்குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றார்.தமிழ்ப் புலமை மட்டுமின்றி ஓவியத்திலும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.வழக்குரைஞர் திரு நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர் , திரு விவேகானந்தர் , திலகர் , அரவிந்தர் , லஜபதிராய் முதலிய தலைவர்களை வரைந்து கண்காட்சி அமைத்தார்.தேசபக்திப் பாடல்கள் , பிரார்த்தனை , தமிழன் இதயம் , காந்தி அஞ்சலி , சங்கொலி , கவிதாஞ்சலி , மலர்ந்த பூக்கள் , தமிழ்மணம் , தமிழ்த்தேன் , நாமக்கல்கவிஞர் பாடல்கள் ...

கண்ணதாசன் - குடும்பம் ஒரு கதம்பம்

              கண்ணதாசன் குடும்பம் ஒரு கதம்பம் பெயர்: முத்தையா பெற்றோர்: சாத்தப்பன் , விசாலாட்சி பிறப்பு: 24.6.1927 இறப்பு: 17.10.1981 மனைவி: பொன்னழகி , பார்வதி , புலவர் வள்ளியம்மை கிரகலட்சுமி என்ற பத்திகையில் நிலவொளியிலே என்ற அவரது முதல் கதைவெளிவந்தது. எழுத்தின் மீதிருந்த அவரது பற்றுதல் காரணமாக தனது 17 ஆவதுவயதில் பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பிறகு திரைஒலி , சண்டமாருதம் , தென்றல் , தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார்.கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினர். கள்வனின் காதலி படத்தில்தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.ஆட்டனத்தி ஆதிமந்தி , இயேசு காவியம் , போன்ற காப்யிங்களையும் கவிதைதொகுப்புகளையும் , அம்பிகை அழகுதரிசனம் , கிருஷ்ண அந்தாதி , உள்ளிட்டசிற்றிலக்கியங்களையும் கவிதாஞ்சலி என்ற கவிதை நாடகத்தையும் அவள் ஒருஇந்துப் பெண். அதை விட ரகசியம் உள்ளிட்ட 26 புதினங்களையும் ஈழத்துராணி , ஒரு நதியின் கதைபேனா நாட்டியம் உள்ளிட்ட 10 சிறுகதைகளையும் , எனது வசந்த காலங்கள் , வனவாசம் , எனது சுயசரிதம் , மனவாசம...

உடல்நலம் பேணல் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

         உடல்நலம் பேணல் -   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை   பெயர்: விநாயகம் பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை , ஆதிலட்சுமி பிறப்பு : 27.7.1876 இறப்பு : 26.9.1954 மனைவி: உமையம்மை பாரதியின் வழியில் எளிமையான கவிதைகளை இயற்றியவர். தமிழ் , மலையாளம் , ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். தமிழ்க்கவிதை , கல்வெட்டாராய்ச்சி , சமூகச் சீர்திருத்தம் , நூற்பதிப்பு , பெண்விடுதலை முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் , ஆசிய ஜோதி , குழந்தைச் செல்வம் , கீர்த்தனைகள் , மலரும் மாலையும் , கதர் பிறந்த கதை , அதவியின் கீர்த்தனங்கள் , குழந்தைச் செல்வம் , கவிமணியின் உரைமணிகள்   முதலியவற்றைப் படைத்துள்ளார். எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதி  யைத் தழுவி தமழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்  பாடல்களைத் தழுவியும் தமிழில்  எழுதினார். 1922 இல் மனோன்மணீயம்  மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப்  பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல்...