கம்பராமாயணம் – குகப் படலம் - கங்கை காண் படலம்
கம்பராமாயணம் – குகப் படலம் கம்பராமாயணம் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார் . கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் , இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. கம்பராமாயணம் பாலகாண்டம் , அயோத்தியா காண்டம் , ஆரண்ய காண்டம் , கிட்கிந்தா காண்டம் , சுந்தர காண்டம் , யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் , 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்ன...