இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் நாட்டு அறிவியல் ஆளுமைகள்

  வா. செ. குழந்தைசாமி     இந்திய   நீரியல்துறை அறிஞரும் , கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர்   தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின்   நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.   க ரக்பூரிலுள்ள   இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்   தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.   இவரது ஆய்விற்காக   இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து   நீரியலில்   முனைவர் பட்டம்   பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு   குழந்தைசாமி மாதிரியம்   என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும் , திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் ,   மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,   அண்ணா பல்கலைக்கழகம் , மற்றும்   இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்   ஆகியவற்றின்   துணைவேந்தராகவும்   பதவி வகித்துள்ளார். இவர்   குலோத்துங்கன்   என்ற புனைப்பெயரில்...

இணையத் தமிழ்ப் பயன்பாடு

                                                இணையத் தமிழ்ப்   பயன்பாடு   இணையம் என்பது உலக அளவில் கணினி பல வலை அமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பாகும். இது உலகம் முழுவதும் உள்ள கணினிகளை இணைத்து, அவற்றில் உள்ள தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறது.   இணைய வரலாறு அமெரிக்க இராணுவம் தனது கட்டளைகளையும் தகவல்களையும் பிற நாடுகள் அறியாவண்ணம் பாதுகாக்கவும் பரிமாறிக் கொள்ளவும் எண்ணியது. ஆதற்குச் சார்லஸ் ஹெர்ஸ் பீல்டு என்பவரை இயக்குநராகக் கொண்டு 1957இல் ஆர்பாநெட் என்ற அமைப்பை ஏற்படுத்தியது.   இவ்வமைப்பு எம்ஐடி என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து, புவிப்பரப்பில் பிரிந்து கிடக்கும் கணினிகளை இணைத்தது. அதன் அடிப்படையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் தேவையான தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்தது. ஆய்வின் முடிவில் தகவல் பரிமாற்றத்திற்காக, 1966 இல் தரவு மாற்றத் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தது. இத்தொழில்நுட்பம் இராணுவத்திற்கு மட்டுமல்லாது பல்கலைக்கழகங...

சிற்றிலக்கியத்தில் அறிவியல்

                   சிற்றிலக்கியத்தில் அறிவியல் நாயக்கர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பலவாகும். அதனால்  தான் நாயக்கர் காலம் சிற்றிலக்கிய காலம் என்றழைக்கப்படுகிறது.   பரணி,  தூது, உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, கலம்பகம் போன்ற  பல்வகை சிற்றிலக்கியங்கள் தோன்றின. இயற்பியல் அறிவு அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை  ஊசலாடும்   நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவரரின்  இயற்பியல் அறிவு புலப்படுகிறது.   மகரக் குழைகளும் ஊசலாட பங்கய மடமாதர் நோக்கி இருவேம் ஆட்ட -அவ்வூசலில் பாய்ந்திலது இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும் நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத் திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)   என்ற அமுதாம்பிக்கை பிள்ளைத் தமிழ் அடிகளில் அமுதாம்பிகை ஆடும்  ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும்  ஆனால்  அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில்  தொங்குவதால் விர...

காப்பியத்தில் அறிவியல்

                  காப்பியத்தில் அறிவியல் காப்பியங்கள்   காப்பிய கால   அறிவியல் செய்திகளைப் பதிவு செய்துள்ளன. கம்பராமாயணத்தில் அறிவியல்   கம்பராமாயணதில் கம்பர் தன் தொடக்கப் பாடலிலேயே   உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளை யாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே   எனக் கூறியிருப்பது   உலகங்கள் தோன்றி மறைவதைக் குறிக்கிறது .   அணு – கம்பர்   இரணிய வதை படலத்தில் இரணியன் இறைவன் எங்கு உள்ளான்? என்று பிரகலாதனிடம் கேட்க ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்த சிறு பகுப்பில் அமைந்துள்ளான் என்று விடை கூறுகிறான். அதனை சாணிறு முளனோர் தன்மை அணுவினை சத கூறிட்ட கோணம்    உளன் என்கிறார் கம்பர். சிலப்பதிகாரத்தில் அறிவியல் சூரிய ஒளியினால் தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை   இளங்கோவடிகள் ஞாயிறு போற்றுதும...