இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆனந்தக் களிப்பு- கடுவெளிச் சித்தர் பாடல்கள் – பொருள் – விளக்கம்

ஆனந்தக் களிப்பு- கடுவெளிச் சித்தர் பாடல்கள் – பொருள் – விளக்கம் பாடல்:1       சாபம் கொடுத்திட லாமோ – விதி தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ    கோபம் கொடுத்திட லாமோ – இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபஞ்)   பொருள் : பாவம் செய்யாதே வாழ்க்கையில் யாருக்கும் சாபம் கொடுத்து விடாதே.   நடக்கும் ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும் என்ற விதியை நம்மால் தடுத்து நிறுத்தி விட முடியாது.   எனவே நம் வயிற்று எரிச்சல் அந்த மனிதனை துன்பத்திற்கு ஆட்படுத்தும் என்பதையும் அறிந்து அவன் மீது கோபத்தை கட்டுப்படுத்து என்று அறிவுரை கூறுகிறார். பாடல்:2   சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத் திவிசு வாசம் – எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம் (பாபஞ்) பொருள் : சொல்ல முடியாத மோசத்தை செய்கின்ற சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன் சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்தி விடும் . நல்ல பக்தியும் விசுவாசமும் எந்த நாளாயினும் மனிதனுக்கு மிகவும் நேசமாக கூடவே இருக்கும். பாடல் 3   ...