இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வட்டக் கண்ணாடி-தோப்பில் முஹம்மது மீரான்

                                           வட்டக் கண்ணாடி                              தோப்பில் முஹம்மது மீரான் தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் சாய்வு நாற்காலி என்ற நாவலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.  பாரம்பரியவீட்டின்மீதும் பொருட்கள் மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டை இந்தச்  சிறுகதை விளக்குகின்றன.                                      வட்டக்கண்ணாடி நான் தங்கி வருவது, பழைய ஒரு நாலு கட்டு வீட்டின் இடிக்கப்படாத வட பகுதியில். நாலு கட்டு வீட்டை எங்களுக்குள் பங்கு போட்டபின் தம்பிக்குக் கிடைத்த தென் பகுதியை இடித்துவிட்டு அதே இடத்தில் காலத்திற்கேற்றபடி புதியதொரு கான்கிரீட் வீட்டை -‘தாருல் ஸமானை’ எழுப்பினான் தம்பி. இரண்டு அறைகள், சிறிய கண்ணாடித் திண்ணை, நடுத்தளம், அடுக்களை, இவை என் ...

லீலை-ந.பிச்சமூர்த்தி

                                                                        லீலை ந.பிச்சமூர்த்தி மண்ணில் பிறந்தால் வானேற ஆசை காலோடிருந்தால் பறப்பதற்கு ஆசை  வானாயிருந்தால் பூமிக்கு வேட்கை கொண்டலாயிருந்தால் மழையாகும் ஆசை மின்னலாயிருந்தால் எருக்குழிக்கு ஆசை எருக்குழியாயிருந்தால் மலராகும் பித்து இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆசை துரும்பாயிருந்தால் நெருப்புக்கு ஆசை தனியாயிருந்தால் வீட்டுக்கு ஆசை வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்கு ஆசை நானாயிருந்தால் நீயாகும் ஆசை உனக்கோ !    உலகாளும் ஆசை.