இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோழர்கள்

                               சோழர்கள் சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு பிரிவினர். மற்ற இருவர் சேரர்களும் , பாண்டியர்களும் ஆவர். ' சோழ நாடு சோறுடைத்து ' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு ' சோறநாடு ' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர் ஆய்வாளர் . தேவநேயப் பாவாணர் நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். பரிமேலழகர்   சேரர் , பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழர்கள் சான்றுகள் இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிக்க உதவுகின்றன. அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் ( Periplus of the Erythr...

டேனிஷ்காரர்கள்-டிரான்க்யூபார்-தரங்கம்பாடி

                          டேனிஷ்காரர்கள் ⁠ நான்காவதாக இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டேனிஷ்காரர்கள் . 1620 இல் ' கிழக்கிந்திய வாணிகக் கழகம் ' ஏற்படுத்திக் கொண்டு நம் நாட்டுக்கு வந்தனர். தரங்கம்பாடி அல்லது டிரான்க்யூபார் (டிராங்கேபார்) என அழைக்கப்படும் டேனிஷ்காரர்களின்   குடியேற்றம் 17 ஆம் நூற்றாண்டில் இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கிழக்கிந்திய நிறுவனம் டான்ஸ்போர்க் கோட்டையை கட்டியது . அப்போது தஞ்சாவூரிலிருந்து வந்த நாயக்கர்களால் இந்த கிராமம் ஆளப்பட்டது. மன்னன்   விஜய ரகுநாத சேதுபதி   மற்றும் டேனிஷ் அட்மிரல் ஓவ்    ஜிஜெட்டே ஆகியோருக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சிறிய பகுதி மன்னனிடமிருந்து ரூ. 3111 வருடாந்திர வாடகைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதன் மையத்தில் டான்ஸ்போர்க் கோட்டை கட்டப்பட்டு டிரான்கேபார் உருவாக்கப்ப...

தொழில் நுட்ப வளர்ச்சி

                      தொழில் நுட்ப   வளர்ச்சி   நெசவு ஆலைகளே பெருந்தொழிலாக விளங்கி வந்த நிலைமை   மாறி சிமெண்ட் , உரம் , போக்குவரத்து வண்டிகள் , டயர் உற்பத்தி செய்யும் தொழில்களும் தொழிற்சாலைகளும்   பெருகின. மத்திய , மாநில அரசுகள் இவற்றைவிடப் பெரிய தொழில்களாகத் துப்பாக்கித் தொழிற்சாலை , டாங்குகள் கட்டும் தொழிற்சாலை , இரயில் பெட்டித் தொழிற்சாலை என்று புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கின. தொழில் பேட்டைகள் தொழில் வளர்ச்சியில் தொழில் பேட்டைகள் , அரசு நிதி உதவி நிறுவனங்கள் , புதிய நகர அமைப்புகள் குறிப்பிடத்தக்கன. அம்பத்தூர் , கிண்டி , இராணிப்பேட்டை , கப்பலூர் , அரக்கோணம் , மார்த்தாண்டம் ,   திருச்சி ,   காரைக்குடி ,    ஓசூர் முதலிய இடங்களில் உருவான தொழில் பேட்டைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் அம்பத்தூரும் கிண்டியும் மிகவும் பெரியன. பஞ்சாலைத் தொழில் கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது. மதுரை , அம்பாசமுத்திரம் ஆகிய இடங...