இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குமாரபுரம் ஸ்டேஷன் - கு. அழகிரிசாமி

                                                   குமாரபுரம் ஸ்டேஷன்   இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு. அழகிரிசாமி. சிறுகதை , கட்டுரை , புதினங்கள் , நாடகங்கள் , மேடை  நாடகங்கள் , கவிதைகள் , கீர்த்தனைகள் , மொழிபெய்ரப்புகள் என்று பல   துறைகளில் சாதனை புரிந்தவர்.                          குமாரபுரம் ஸ்டேஷன்- கு. அழகிரிசாமி   குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும் , ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா ? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத்தானே வேண்டும் ? அந்தக் கணக்கில்தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களே ஒழிய , மற்றபடி கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண்டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதானிருக்கிற...