சங்ககால ஆட்சிமுறை,சங்ககால ஆட்சிமுறை,மருமக்கள் தாயமுறை,ஐம்பெரும் குழு,எண்பேராயம்

 

                      சங்ககால ஆட்சிமுறை

 

பெண்வழிச் சமுகம்

மிகத்தொடக்க காலமான கற்காலங்களில் தலைமை வகித்த ஆணோ பெண்ணோ அவர்கள் சார்ந்த குழுவின் தலைவர் ஆவர்.

அதில் பெண்ணே தலைமை தாங்கியதால் ஆண் வழிச் சமூகம் தோன்றும் முன்னர் பெண்வழிச் சமுகமாகவே இருந்தது.

பெண்வழி சமூகம் இருந்த காலத்தில் உணவு சேகரிப்புப் போதாமை ஏற்பட்டது.

அதன் பின்னர்  ஆண்கள் செய்த உற்பத்திப் பணியை ஆண்கள்  ஈடுபட்டனர்.

பெண் தெய்வங்கள்

இத்தகைய சூழலில் பெண் தலைமை தாங்கியவர்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகி விட்டனர்.

அணங்கு முதலிய காவலாளர்கள் காவல் தெய்வங்களாகி விட்டன.

இனக் குழுக்கள் : தமிழ்க் கடவுள்

ஆண் தலைமையைச் சில இனக் குழுக்கள் ஏற்றுக் கொண்டனர்.

அவர்களின் முன்னோர் தற்காலத்தில் தமிழ்க் கடவுள்களாக உருமாற்றம் பெற்றனர்.

இவர்கள்தான் நிலக் கடவுள்களாகிய முருகன், திருமால், இந்திரன், கொற்றவை, வருணன் முதலானோர்.

பல இனக் குழுக்கள் ஏற்றுக் கொண்ட கடவுளரில் ஒருவர் சிவன் எனலாம்.

இனக்குழு சமுதாயம்

இனக் குழுத் தலைவர்களில் சிலர் பிற்காலத்தில் கடையேழு வள்ளல்களாகவும்  குறுநில மன்னர்களாகவும்  விளங்கினர்.

வறண்ட நிலத்தில் குடியிருந்து தமது குழுவினரைப் பாதுகாத்த ஒருவர் சிற்றூர் மன்னராகவும் குறுநில மக்களின் இனக்குழுத் தலைவர்கள் குறுநில

மன்னர்களாகவும், குறுநிலங்களை ஒருங்கிணைத்த பெருநிலத் தலைவர்கள் வேந்தர்களாகவும் விளங்கினர்.

சங்க இலக்கியம்  

சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டவை.  

அதில் சிற்றூர் மன்னர்கள், குறுநில மன்னர்கள் பற்றிய குறிப்புகளும்  காணப்படுகின்றன.

இவர்களது ஆட்சிக் காலத்தில் அறநெறிப்படி ஆட்சி செய்துள்ளனர்.

இரவலர்: பாணர் : பாடினி

சங்ககால வேந்தர்கள் காலத்தில் நான்கு வருணங்கள், சட்டதிட்டங்களும் வறியவர், இரவலர் போன்ற புதுக் குழுக்களும் சமூகத்தில்

ஏற்பட்டன.   

அதே நிலையிலிருந்த கலைஞர்கள் இரவலர்களாகவும் புலவர்கள் புதிதாக உருவான காலத்தில் பாணரும் பாடினியுமாகிய புலமை மிக்கோரும்

இரவலராகவே கருதப்பட்டனர்.

குறிப்பாக வரிசையறிதல், குறி எதிர்ப்பு போன்ற புதிய பண்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் தோன்றின.

சங்ககால ஆட்சி

சங்ககாலத்தில் மன்னராட்சி நிலவியது.

அக்கால அரசர்களில் சிறந்தவர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் மூவேந்தர்கள் எனவும் மற்ற அரசர்கள் மன்னர்களாகவும் சங்கநூல்களில்

குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அத்தகைய சிற்றரசர்களாகிய மன்னர் பலர் ஆட்சி புரிந்ததாகவும் அறிகிறோம்.

அதியமான் நெடுமான் அஞ்சி, பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், நள்ளி முதலியோர் இச் சிற்றரசருள் சிலராவர்.

 

அரசர்களின் ஆட்சி

தமிழகத்தில் எப்போது அரசர்களின் ஆட்சி தோன்றியது ? எனத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை.

கோன் என்னும் சொல் அரசனைக் குறித்தது.

முல்லை நிலத்தில் கால்நடைகளைக் காப்பவனையும் கோன் என்னும் சொல் குறிப்பிட்டது.

முதன்முதலில் முல்லை நிலத்தில் குடும்பம் தோன்றியதுபோல் அரசும் தோன்றியிருக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆயினும் சேர நாட்டில் மன்னர்களின் அடையாளமாக இருந்தது வில் என்று இருப்பதைக் கொண்டு, ஆதியில் வேடனாக இருந்தவன் பிற்காலத்தில் மன்னனாகத் திகழ்ந்திருக்கலாம் என்று கருத இடம் உண்டு.

ஆட்சி அதிகாரம்

மன்னனின் மூத்த மகனே அடுத்த ஆட்சி அதிகாரம் ஏற்கத் தகுதியும் உரிமையும் பெற்றிருந்தான்.

அக்காலக் கொள்கைப்படி அரசர்கள் நீதி, நற்குணம் ஆகிய பண்பாடுடன் ஆட்சி புரிந்தனர் .

இதனைக், "காய்நெல்லறுத்து கவளம் கொளினே_ எனத் தொடங்கும் சங்கப் பாடல் உணர்த்துகின்றது.

திருவள்ளுவர் செங்கோன்மை எனவும் கொடுங்கோன்மை எனவும்  குறட்பாக்கள் இயற்றியதிலிருந்து இரண்டின் தன்மையையும் அறியலாம்.

 

இளைய அரசர் இளங்கோ, இளங்கோசர், இளஞ்செழியன் , இளஞ்சேரல், இளவெளிமான், இளவிச்சிக் கோன் போன்ற பெயர்கள் வழக்கில் இருந்தன.

மருமக்கள் தாயமுறை

சங்ககாலம் முதல் சேர மன்னரிடையே மருமக்கள் தாயமுறை வழக்கில் இல்லை .

அவ்வழக்கம் பிற்காலத்ததாக இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

 

ஐம்பெரும் குழு  எண்பேராயம்

அரசனுக்கு உதவிபுரிய அமைச்சர்கள் இருந்தனர்.

 ஐம்பெரும் குழு  எண்பேராயம்   பற்றி மதுரைக்  காஞ்சியிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்று நூல்களிலும்,  கூறப்பட்டுள்ளன.

மதுரைக்காஞ்சி  நாற்பெருங் குழுவைப் பற்றிப் பேசுகிறது.

ஐம்பெரும் குழு உறுப்பினர்கள்.

 

1. கணியர்கள் (காலக் கணிப்பாளர்கள்) 2. படைத் தலைவர் 3.தூதுவர் 4.ஒற்றர்  5. அமைச்சர்

 

எண்பேராயத்தின் உறுப்பினர்கள் வருமாறு:

 

1.கரணத்தியலவர் - அரசுக் கணக்கர்கள்

2. கருமகாரர் - செயலர்

3.கனகசுற்றம் - அரசியல் கஜானா அலுவலர்

4. கடைக் காப்பாளர் - அரண்மனை காப்போர்

5. நகர மாந்தர் - நகரில் வாழும் மக்களில் சிறந்த தலைவர்கள்

6.படைத் தலைவர் காலாட் படையின் தலைவர்கள்

7. யானை வீரர் -யானைப்படைத் தலைவர்கள்

8. இவுளி மறவர் - அதாவது குதிரைப் படையின் தலைவர்கள்

ஒற்றர்கள்

மன்னனைப் பொருத்தே மக்கள் நலம் இருந்தது.

ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.

ஒற்றர்களை வேறு ஓர் ஒற்றைக் கொண்டு ஆராய்ந்து உண்மை அறிந்தனர்.

 

ஊராட்சி: பொதியில், அம்பலம்,

 

சங்க காலத்திலேயே ஊராட்சியே முதன்மையாகப் போற்றப்பட்டது.

ஊர்களில் மக்கள் கூடும் இடம் மன்றம், பொதியில், அம்பலம், அவை என்னும் பெயர்களில் வழங்கப்பட்டன .

பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது . (பட்டினப்பாலை 245-49).

சில ஊர்களில் பெரிய மரத்தடியில் மன்றம் அல்லது பொதியில் கூடியது.

குறிப்பாக இவை வேப்பமரத்தடியில் அமைந்திருந்தன ( புறநானூற்றுச் (76, 79, 371).

மன்றம் அல்லது பொதியில் என்னும் அமைப்புகள், மக்களுக்கிடையிலான வழக்குகளைத் தீர்ப்பதற்காகவே இருந்தன.

அக்கூட்டத்தில், வயது முதிர்ந்தவர் தலைவராக அமர்ந்தனர்.

சேரிகள்

ஊரில் சில பகுதிகள் சேரிகள் எனப்பட்டன.

மக்கள் சேர்ந்து வாழ்ந்ததால் அவை சேரி எனப்பட்டன.

இன்றுபோல், சாதிப் பிரிவினைகள் அக் காலத்தில் இல்லாததால், செய்யும் தொழில் அடிப்படையில் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.

(எ-டு) பறைச்சேரி, பார்ப்பணச்சேரி,இடைச்சேரி

 

நகராட்சி:

சங்க காலத் தமிழகத்தில் சிலநகரங்கள் இருந்தன.

ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமை போல், நகரங்களிலும் பட்டினம், பாக்கம் எனச் சில இடங்கள் இருந்தன.

பட்டினம் என்பது கடலோர நகரத்தைக் குறிக்கும் (பட்டணம் என்பது முழு நகருக்குள் இருக்கும்)

 பாக்கம் பட்டினத்தின் மற்றொரு ஒருபகுதி (கடற்கரையினின்றும் சற்று உள் அமைந்த பகுதி).

சங்ககாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை காவிரிப்பூம் பட்டினம் (புகார்), கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, காஞ்சி

முதலியன.

நகரங்கள் வணிகத்தினாலும் தொழில் சிறப்பினால்  மதுரையும் காவிரிப் பூம்பட்டினமும் சிறப்புற்று வளர்ந்திருந்தன.

மதுரை, வஞ்சி போன்ற நகரங்கள் சீராக ஆளப்பட்டுவந்தன.

மதுரை மாநகரின் தெருக்கள் அன்றாடம் காலையில் பெருக்கப்பட்டிருந்தன.

மன்னர்களது அரண்மனைகள் ஆழ்ந்த அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டடி ஊர்க் காவலர்கள் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்