சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம் -பொருள் – விளக்கம்
சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம் -பொருள் – விளக்கம் தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும். இதன் ஆசிரியரான உமறுப்புலவர் , இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால் , இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 45 படலங்களும் , இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் என நூல் முழுவதும் 92 படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன. 1. குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தொடை நறவஞ் சிந்தும் ...