இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வல்லினம் மிகா இடங்கள்

          வல்லினம் மிகா இடங்கள்   நிலைமொழி இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் ய , ர , ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதைச் சான்றுடன் காண்போம். சுட்டு , வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகா அது , இது , எது ; அவை , இவை , எவை ; அன்று , இன்று , என்று , அத்தனை , இத்தனை , எத்தனை ; அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு ; அவ்வாறு , இவ்வாறு , எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம்   மிகாது. சான்று: அது + சிறிது = அது சிறிது எது + பெரியது = எது பெரியது ? அவை + போயின = அவை போயின எவை + பெரியவை = எவை பெரியவை ? அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான் என்று + காண்பேன் = என்று காண்பேன் ? அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள் எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள் ? அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர் எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய் ? அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான் எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள் ? எண்ணுப்பெயர்கள் , எண்ணுப்பெயரடை...