இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்

         சீறாப்புராணம் உடும்பு பேசிய படலம்     1 .     வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி      யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின்      றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு      மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார்.        பொருள்: நபிகள் நாயகம் அ வர்களோடு அழகானது பொருந்தப் பெற்ற உமறு என்னும்   வள்ளலானவர்களும்   இஸ்லாமென்னும் மார்க்கதினை     பின்பற்றினர்.   அவ்வாறு பின்பற்றிய பின்னர் தைரியமுடையவர்களாகவும் மனசின்கண் கொண்ட அறியாமையானது அகலும் வண்ணம் பெரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.   2. செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய   பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு   நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு   முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார்.         பொருள்:     அது மட்டுமின்றி , குற்றமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்கு உரித்தான அழகிய பயிரைப் போன்ற க...