வீரராகவர் பாடல்- இம்பர் வான் எல்லை இராமனையே பாடி - பொருள்- விளக்கம்

  

வீரராகவர் பாடல்- இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

இவர் தந்தையார் வடுகநாதர் . வீரராகவர் பிறவியிலேயே கண்  இழந்தவர்.  கேள்வி வாயிலாகக் கல்வி கற்றார்.

திருக்கழுக்குன்ற ப் புராணம், திருக்கழுக்குன்ற  மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்,திருவேங்கட கலம்பகம் போன்றவை ஆகும் . வீரராகவர் இயற்றிய 39 பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளன.

 இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

என் கொணர்ந்தாய் பாண  நீ என்றாள் நீ பாணி

 வம்பதாங் கபைமென்றேன் பூசுமென்றாள்

 மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்

 பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்

 கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்

 கைமா என்றேன் சும்மா கலங்கினாளே .

பொருள்:

அரசனை புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் 

வீட்டிற்கு வருகின்றான். வறுமையில் இருந்த மனைவி என்ன பெற்று 

வந்திருக்கின்றாய் என்று கேட்கின்றாள். களபம் என்று சொல்ல 

சந்தனம் என்று நினைத்து நீ பூசிக்கொள் என்கின்றாள் .மாதங்கம் 

என்று சொல்ல தங்கம் என்று நினைத்து நாம் நன்றாக வாழலாம் 

என்கிறாள் . பாணானோ வேழம் என்றார். உடனே அவளும் கரும்பு 

என்று நினைத்து சாப்பிடுங்கள் என்றாள் . கம்பமா என்று சொல்ல 

கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்று கூறுகிறாள். 

 இறுதியில் புலவரும் கைமா என்கிறார். அப்போதுதான் அது யானை 

என  நினைத்து இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை எப்படி 

யானைக்கு உணவு போடுவது என்று கலங்கினாள்  பானையைக் 

குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்  படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்