நாராய் நாராய் செங்கால் நாராய்-சத்திமுத்த புலவர்-பொருள் - விளக்கம்
நாராய் நாராய் செங்கால் நாராய்-சத்திமுத்த
புலவர்
நாரைவிடு தூது என்ற நூலின் ஆசிரியர் சத்திமுத்தப்புலவர்.
சத்தி முத்தம் என்ற ஊரில் பிறந்த காரணத்தினால்
சத்திமுத்தப்புலவர் என்று
அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர்
என்னவென்று தெரியவில்லை.
நாராய் நாராய் செங்கால்
நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால்
நாராய்
நீயும் உன் மனைவியும் தென்திசை
குமரியாடி வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர்ச் சத்தி முத்த
வாவியுட் தங்கி
நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும்
மனைவியைக்
கண்டு எங்கோன் மாறன் வழுதி
கூடலில்
ஆடையின்றி வாடையில்
மெலிந்து
கையது கொண்டு மெய்யது
பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும்
பாம்பென் உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!
பொருள்:
பனங்கிழங்கை இரண்டாகப்
பிளந்தது போல அலகு கொண்ட நாரையே நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக்
களைத்து விட்டு வடக்கு திசையில் செல்லும் போது சத்தி முத்தம் என்னும் எங்கள் ஊர்
குலத்தினில் தங்கி இளைப்பாறி செல்லுங்கள்.
அந்த சமயம் பொருள் ஈட்ட சென்ற நான் எப்போது வருவேன் என மழை பெய்து நனைந்து போன வீட்டுச் சுவர் மீது
உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.
மன்னனைப்
பார்கக வந்த நேரம் இருண்டு போனதால் இந்த
மதுரையில் ஒரு மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை, கால்களை கட்டிக்கொண்டு
பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனைக் கண்டேன் என்று கூறுவாயா? என்று நாரை விடு தூதாக அமந்துள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக