திருவரங்கக் கலம்பகம்- அழகிய மணவாளதாசர் -பொருள் - விளக்கம்
திருவரங்கக்
கலம்பகம்- அழகிய மணவாளதாசர்
திருவரங்கக்கலம்பகம் பாடியவர் அழகியமணவாளதாசர் . அழகியமணவாளதாசரை 'பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் அழைப்பர். இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார் இதனை அஷ்ட பிரபந்தம்' என்றும் அழைப்பர். திருவரங்கத்தில் துயில்கொள்ளும் அரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது திருவரங்க கலம்பகம். அம்மானை , இரங்கல், ஊசல், ஊர் கலி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய பாடப்பட்டுள்ளது.
திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல்திருநாமம், திருவேங்கடமாலை , திருவோங்கடத்தந்தாதி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
பாடல்
பேசவந்த தூதசெல்லரித்த வோலை செல்லுமோ
பெருவரங்களருளரங்கர்
பின்னைகேள்வர் நாளிலே பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர்பட்ட தெங்கள்பதி புகுந்து பாரடா வாசலுக்கிடும் படல்களித்து வந்தகவி கைமா
மகுடகோடி தினையளக்க வைத்தகாலும் நாழியும்
வீசுசாமரங் குற்றொடுத்த கற்றை கற்றிலும் வேலியிட்டதவர் களிட்ட வில்லும்
வாளும்வேலுமே.
பொருள்:
திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு
வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும்
அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த எங்கள் குலப்பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட
பட்டத்து இளவரசர்கள், பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து பாரடா . அங்கே
நுழைவாசலுக்குப் படல் வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின் மகுடங்கள். அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து
வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும், நாழியாகவும் பயன்படுத்துகிறோம்.அவர்களின்
கிரீடங்களில் இருந்த கற்றை முடிகளை எங்களின் சாமரமாக்கியுள்ளோம். மாளிகைகள் சுற்றிலும் வைத்திருப்பது அவர்கள்
கொண்டு வந்து வில்லும் வாளும் வேலும்தான் என்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக