கலிங்கத்துப்பரணி-விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண-செயங்கொண்டார்- விளக்கம்- பொருள்

கலிங்கத்துப்பரணி

 

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி  வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப்போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக்  கொண்டு பாடப்பட்டது . அனந்தவர்மன் என்னும் கலிங்க மன்னன் திறை கொடுக்காததன்  காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரன் போரில் வெற்றி பெற்றதே இதன் ‌பாடுபொருள்.

 

பெயர்:

 

பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழக்கத்திற்ககு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரால் இந்நூல் பாடப்பட்டுள்ளது. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூலி கலிங்கத்துப் பரணி ஆகும் . இது பிற்காலப் பரணி நூல்களுக்கு முன்னோடியாய்  அமைந்த நூலாகும்.

ஆசிரியர்

செயங்கொண்டார்  முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர்க திகழ்ந் தவர். இவர் கலிங்கத்துப்பரணி  தவிர புகார் நகர வணிகர் பெருமக்களைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற நூலை பாடியுள்ளார்.  

 பரணி -விளக்கம்:              

 பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும். இதை, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது.

கலிங்கத்துப்பரணி-செயங்கொண்டார்

1.     

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்

பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்

பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.

 

பொருள்:

விருந்தினரும் ஏழை எளியவர்களும் வந்து நம் இல்லத்தில் உண்ணுவதைப் பார்த்து வள்ளல்கள் மகிழ்ச்சியடைவர் . அது போல  போர்க்களத்தில் இறந்து வீழ்ந்த வீரர்களைப் பருந்துகளும் கழுகுகளும் வந்து அவர் தம்  உடலை உண்ணுகின்றன. அதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்திருப்பதைக் காணுங்கள்.  

 

2

சாமலவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்

சாருநர்போல் வீரருடல் தரிக்கு மாவி

போமளவு மவரருகே யிருந்து விட்டுப்

போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்

 

பொருள்

பிறருக்கு உதவாதவரைச் சுற்றி அவர்  சாகும் வரையில் காத்திருந்துவிட்டு அவர் இறந்ததும் அவர் பொருள்களைக் கவர்ந்து செல்லும் சுற்றத்தார் போல உயிர் பிரியும் வரையில் காத்திருந்து, உயிர பிரிந்ததும் உண்ணும் நரிக்கூட்டம் சேர்த்திருப்பதைக் காணுங்கள்.

3

மாமழைபோற் பொழிகின்ற தான வாரி

மறித்துவிழுங் கடகளிற்றை வெறுத்து

வானோர் பூமழைமேற் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு

பொருட்பெண்டிர் போன்றமையுங் காண்மின் காண்மின்

 

பொருள்

யானை உயிருடன் உள்ளவரை அதன் கன்னத்தில் ஒழுகும் மததிரை உண்ட வண்டுகள் யானை இறந்த பின்னர் அதனை விட்டு நீங்கி வானவர் பொழியும் பூ மழை மேல் சென்று சேருகிறது. இது  பணம் கொடுக்கும் வரையில் அவரைத் தழுவிய பொருட்பெண்டிர் பணம் தீர்ந்ததும் விட்டு விட்டு  வேறு ஓர் ஆடவனைத் தழுவுவதை வபோல் நடந்துகொள்வதைப் பாருங்கள்.

4

சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து

தடங்குருதி மிசைப்படியுங் கொடி கள் தங்கள்

காந்தருடன் கனலமளி  யதன்மேல் வைகுங்

கற்புடைமா தரையொத்தல் காண்மின் காண்மின்.

 

பொருள்:

யானை சாய்ந்ததும் அதில் கட்டப்பட கொடி நானும் சாய்ந்து யானையுடன் குருதியில் மிதக்கிறது . அக்காட்சி கற்புடையப் பெண்கள் கணவனை எரிக்கும் போது தானும் அந்த ஈமத் தீயில் விழுந்து எரிவது போல் இருப்பதைக் காணுங்கள்.

5.

தங்கணவ ருடன்தாமும் போக போக வென்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

எங்க ணவர்  கிடந்தவிட மெங்கே  யென்றென்

ரிடக்கினியைக்  கேட்பாரைக்  காண்மின் காண்மின்  

 

பொருள்:

 

போர்க்களத்தில் இறந்து கிடக்கும் தம் கணவர்களைத் தழுவி உயிர்விட எண்ணிய மனைவிகள்  தன் கணவனின்  உடல் எங்கே என்று சாதகரைக் கேட்கின்றனர் . தான் கணவர் உடல் இதுதானா என்று தடவிப் பார்க்கின்றனர்.   போர்க் களத்தில் இருக்கும்  இடாகினிப் பேயைக் கேட்பதைப் பாருங்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்