காளமேகப் புலவர் - முத்திருக்கும் கொம்பசைக்கும் - பொருள் - விளக்கம்
காளமேகப் புலவர் - முத்திருக்கும் கொம்பசைக்கும்-பொருள்-
விளக்கம்
திருமலைராயன்
அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்" பாடி அவரை
வென்றவர். திருவரங்கம் பெரிய கோயிலில் மடப் பள்ளியில் சமையல் தொழில் செய்தவர். வர்க்க
எழுத்துக்களை மட்டுமே கொண்டு பாடல் புனைந்தவர்.
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
பாடல்
முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும்
நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும்
சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு
மால்யானை யாம்.
பொருள் :
ஒரே பாடலில் ஆமணக்கு
மற்றும் யானையின் ஒற்றுமையைப் பாடியுள்ளார். ஆமணக்குச் செடியில் ஆமணக்குக்
கொட்டைமுத்து இருக்கும். ஊன்றுகோல் போன்ற தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள
மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித்
தலையைச் சாய்க்கும்.
யானை
முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன்
துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக்
குலையைச் சாய்க்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக