அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்- கலையாத கல்வியும்-பொருள்

 

       அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்- கலையாத கல்வியும்-பொருள்  

 

அபிராமி அந்தாதி என்பது அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் பெயரில் பாடப்பட்டது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!

பொருள்:  முழுமையான அறிவு தரும் கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான, ஆபத்ததி்ல் உதவும் நணபர்கள், அழியாத செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழும் வலிமையுடைய  உடல் , நோயற்ற உடல், எப்பொழுதும்  சோர்வின்றி இயங்கும் மனம், மாறாத அன்பைப் பொழியும் மனைவி,  குழந்தைகள், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் காக்கும் திறம், பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தடையில்லாத வாழ்க்கை, நாட்டில் தர்ம நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, நல்லோர் சேர்க்கை முதலியனவற்றை  குறைவறத் தருபவள் அன்னை அபிராமி. அவள் அலைகள் வீசும் கடலில் துயில் கொள்ளும் பெருமாளின் தங்கையாவாள். சிவ பெருமானின் உடலில் ஒரு பாகத்தைப் பெற்று அவனை விட்டு நீங்காமல் வாழ்பவள் என்கிறார் அபிராமி பட்டர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்