ஔவையார்- வான்குருவியின் கூடு-பொருள்-விளக்கம்
ஔவையார்- வான்குருவியின் கூடு-பொருள்-விளக்கம்
பாடல்
வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி
யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே
என்று வலிமைசொல வேண்டாம் காண்
எல்லார்க்கும்
ஒவ்வொன்று எளிது
பொருள்:
தூக்கணாங்குருவியின்
கூடும், உறுதியான அரக்கும், கரையான் புற்ரையும், தேன் கூட்டினையும் ம, சிலந்தியின்
வலையும் நம்மால் செய்ய முடியாது அவை அரிதானவையாகும்.
அதனால் நான் உயர்ந்தவன் என்று நம்மை நாமே உயர்வாக எண்ணக் கூடாது. இவ்வுலகில் பிறந்த
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று அவரால் சிறப்பாக செய்ய முடிந்த ஒன்றாக இருக்கும் என்பதை
உணர வேண்டும் .
கருத்துகள்
கருத்துரையிடுக