மாணிக்கவாசகர்- திருவாசகம்-நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!-பொருள்-விளக்கம்

 

            மாணிக்கவாசகர் திருவாசகம்

(திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்)

 

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

 

பொருள்

 திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க.  திருவைந்தெழுத்தின் வடிவாக 

விளங்கும் இறைவனது திருவடி வாழ்க.   இமைக்கும் நொடி 

நேரமும் கூட என் மனத்தில் இருந்து  நீங்காத அவனின்  திருவடி 

வாழ்க. திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை ஆட் கொண்ட 

குருமூர்த்தியின்  திருவடி வாழ்க.வேதங்களின்   வடிவாகி நின்று 

இனிமையைத் தரும்  இறைவனது திருவடி வாழ்க.  ஒன்றாகவும் 

பலவாகவும்  உள்ள இறைவனது திருவடி வாழ்க என்று வணங்குகிறார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்