திருநாவுக்கரசர் - தேவாரம் - நாமார்க்குங் குடியல்லோம் -விளக்கம் -பொருள்
திருநாவுக்கரசர் தேவாரம்
நாமார்க்குங் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம்
பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங்
குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
பொருள்
யாருக்கும்
அடிமையாகாத தன்மையை உடையவனும் , நல்ல சங்காலான
வெண்குழையை
ஒரு காதில் உடையவனும் ஆகிய சங்கரனுக்கு நாம்
என்றும் மீளாத
அடிமையாய்,அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன்
சேவடிகளையே
அடைக்கலமாக அடைந்ததேன் .
எனவே நான் வேறு
யார்க்கும் அடிமைத் தன்மையுடன் இருக்க மாட்டேன்.
எமனைக் கண்டும்
அஞ்ச மாட்டேன். நரகத்திற்குச் சென்று துன்பத்தை
அடைய மாட்டேன்
. பொய்யும் கூற மாட்டேன்.
என்றும் இன்புற்று
இருப்பேன். உடலை
வருத்தும் பிணியாவது இது என அறியேன் . வேறு
யாரையும் பணியோம்
. எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித்
துன்பமில்லை .
கருத்துகள்
கருத்துரையிடுக