பழமொழி நானூறு - முன்றுறை அரையனார் - தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்- விளக்கம் - பொருள்
பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
தந்நடை
நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை
சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை
யானே நடவத்தா நின்னடை
நின்னின்
றறிகிற்பார் இல்.
பொருள் :
கீழான குணமுடையவர் தம் நடத்தையைத் தாம் எண்ணிப்
பார்ப்பதில்லை.
தாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்றும் எண்ணிப்
பார்ப்பதில்லை.
செம்மையான நன்னடத்தையைக் கடைப்பிடிப்பதில்லை.
இத்தகைய சிறியார் போல இல்லாமல் நம்முடைய பெருமைக்கு ஏற்ற
நடத்தையைப் பின்பற்ற வேண்டும் . நாம் நடத்தையை நம்மைத் தவிர
வேறு யார் அறிந்துகொள்ள முடியும். ஆதலால் உன் பெருமைக்கு ஏற்ற
நடத்தையை நீதான் பின்பற்ற வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக