இனியவை நாற்பது -பூதஞ் சேந்தனார்-இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே-பொருள்

 

       இனியவை நாற்பது -பூதஞ் சேந்தனார்

 

இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே

 

கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே

 

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

 

லிடமென் றுணர்தல் இனிது.

 

பொருள்

 

இளவயதிலேயே முதுமையில் வரக்கூடிய  மனப்பக்குவம் கொண்டிருப்பது

 

இனிதானது .   உறவினர்கள் அன்புமொழிகள் கூறுபவராக இருப்பது

 

இனிதானது . மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட தளிர்

 

போன்ற இளம் பெண்கள் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிவடைவதும்

 

இனிதானதாம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்