தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி- பொருள்

             தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி

 

1.    அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்

 

சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.

 

2.    அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்

 

சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே.

 

3.    ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்

 

பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே.

 

4.    ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து

 

சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே.

 

5.    ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்

 

கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே.

 

பொருள் :

 

1. முதலும் முடிவும் இது  தான் என்று  அளவிட முடியாத 

அருட்பெருஞ்சோதியான இறைவன் என் அறிவில் தங்கி, எனக்கு அருள் 

செய்வாரோ சொல் பைங்கிளியே!

 

2.  பைங்கிளியே! என் மனதின்கண் பொருந்தியிருக்கின்ற இறைவனிடம் நீ 

சென்று, என் துன்பத்தை எல்லாம் எடுத்துக்கூறி, எனக்கு முடிவில்லா 

இன்பம் பெற்று வந்து தருவாயாக.

 

3.   உயிர்க்கு உயிர் என்று கூறப்படுகின்ற அற்புத மூர்த்தியாகிய 

இறைவனின் ஞானத்தால் பெறப்படுகின்ற சுகம், இந்தப் பாவியாகிய 

எனக்குக் கிடைக்குமோ? நீ சொல் பைங்கிளியே!

 

4.  பைங்கிளியே! யாரும் அறியாத வண்ணம், இரகசியமாக வந்து என்னை 

ஆட்கொள்ளும்படி, என் தலைவனாகிய இறைவனிடம் நீ சொல்லி 

வருவாயாக.

 

5. மழலைச்சொல் பேசும் பைங்கிளியே! ஆறுபோல பெருகிய என் கண்ணீரால்  


என் தேகம் எங்கெணும் நனைத்ததையும்  என்னுடைய  வருத்தத்தினையும்  நீ 

இறைவனிடம் சொல்லாமல் வந்தது ஏன் . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்