தமிழ் நாட்டு அறிவியல் ஆளுமைகள்
வா. செ.
குழந்தைசாமி
இந்திய நீரியல்துறை
அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும்
ஆவார்.
இவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.
கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில்
முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீரியலில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில்
இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில்
வழங்கப்படுகிறது.
இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார்.
பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும்
பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை
காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,
மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி
வகித்துள்ளார்.
இவர் குலோத்துங்கன் என்ற
புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இவரது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார்.
சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத்
தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
விருதுகள்
தமிழ் இலக்கியத்திற்கு இவரது
பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது
வழங்கியுள்ளது.
கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது 1992-ம் ஆண்டும், பத்மபூசண் விருது, 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது.
பெ. நா. அப்புசாமி ஐயர்
அறிவியல் தமிழ் மற்றும்
கலைச்சொல்லாக்கத்தின் முன்னோடி. மொழிபெயர்ப்பாளர்; வழக்கறிஞர்.
அறிவியலை தமிழ் வழி
பரப்பவும், அறிவியல் துறையில் தமிழை வளர்க்கவும் எழுபதாண்டுகளுக்கு மேல் உழைத்தவர்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளும், அறிவியல் சிறுவர் இலக்கிய நூல்களும்
பாடநூல்களும் எழுதியுள்ளார்.
சென்னை உயர்நீதி
மன்றத்தில் மேல் முறையீட்டு நிலை (Appelate side)
வழக்கறிஞராக 50 ஆண்டுகள் பணியாற்றினார்.
அறிவியல் இலக்கியம்
பெ.நா. அப்புசாமியின்
முதல் அறிவியல் கட்டுரை 'பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’. 1917 ஜூலையில் தமிழர்நேசன் முதல் இதழில்
வெளிவந்தது. அக்கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
அறிவியல் சிறுவர் இலக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி, பல சிறுவர் நூல்களை எழுதினார்.
3000-க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள்.
இவரது அறிவியல்
கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
பேனா’ என்ற புனைபெயரில்
பல அறிவியல் நூல்களை அப்புசாமி எழுதினார்.
அப்புசாமி எளிய அறிவியல்
அறிமுகக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதினார். சூரியனைப்பற்றிய கட்டுரைகளும், 'ரேடார் அறிவிக்கும் நட்சத்திரங்கள்' , 'துணைக்கோள்களும்
செய்திப்போக்குவரத்தும்', 'ராமன் விளைவு'போன்ற கட்டுரைகளில் அறிவியல் உண்மைகளை மிக எளிய நடையில் எழுதினார். பள்ளிப்
பாடத்திட்டத்திற்காக 'நவீன சித்திர விஞ்ஞானம் ' என்ற பெயரில் தொடர் நூல்களை ஜே.பி. மாணிக்கத்துடன் இணைந்து எழுதினார்.
அப்புசாமி எதிர்கால
அறிவியல் சார்ந்தும் எழுதியுள்ளார். 1936-ல் காற்றடைத்த மிகபெரும் பலூன்களில் விண்வெளிப்பயணம் செய்வது பற்றிய கட்டுரையை
எழுதினார். 1965-ல் துணைக்கோள்கள் (geostationary satellites) பற்றி விரிவாக எழுதினார். நவீன அறிவியல் கோடபாடான மேதமை அமைப்பு(expert system) முறையில் இயங்கும்
மின்னணு மொழியாக்கங்கள் பற்றிய தகவல்களை 1960-லேயே தன் கட்டுரைகளில் எழுதினார்.
பாடநூல்கள்
பெ.நா.அப்புசாமி
ஜே.பி.மாணிக்கத்துடன் இணைந்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல்நூல்களை எழுதினார். அம்மணி அம்மையாருடன்
இணைந்தும் பாடல்நூல்களை எழுதினார்.
மணவை முஸ்தபா
தமிழக எழுத்தாளர்.
இதழாளர், அறிவியல் தமிழ் ஆய்வாளர். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் ஆசிரியராகச்
செயல்பட்டார். ‘பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்’ நூல் பதிப்பின்
பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் உள்ளிட்ட பல துறை சார்ந்த
அகராதிகளை, கலைக் களஞ்சியங்களை உருவாக்கினார்.
தனது அறிவியல் தமிழ்ப்
பணிக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
ணவை முஸ்தபா, தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986-ல் சென்னையில் நடத்தினார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தைத்
தொடங்கி, அறிவியல் தமிழ் பணியாற்றினார்.
அறிவியல் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ்
கருத்தரங்குகளை நடத்தினார்.
கூகுளில் பயன்படுத்தப்படும் எட்டு லட்சம் கணினித் தமிழ் சொற்களை உருவாக்கினார்.
எந்தெந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதி பெறத் தகுதியானது என்பதை ஆய்வுத்
தரவுகள் மூலம் ஆவணப்படுத்தினார்.
அறிவியல் தமிழ் மெய்நிகர் இருக்கையை ஏற்படுத்தினார்.
நன்றி : விக்கிபீடியா
கருத்துகள்
கருத்துரையிடுக