சிற்றிலக்கியத்தில் அறிவியல்

 


                 சிற்றிலக்கியத்தில் அறிவியல்

நாயக்கர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பலவாகும். அதனால் 

தான் நாயக்கர் காலம் சிற்றிலக்கிய காலம் என்றழைக்கப்படுகிறது.  பரணி, 

தூது, உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, கலம்பகம் போன்ற

 பல்வகை சிற்றிலக்கியங்கள் தோன்றின.

இயற்பியல் அறிவு

அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை 

ஊசலாடும்  நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவரரின் 

இயற்பியல் அறிவு புலப்படுகிறது.

 

மகரக் குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம் ஆட்ட -அவ்வூசலில் பாய்ந்திலது இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும் நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத் திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)

 

என்ற அமுதாம்பிக்கை பிள்ளைத் தமிழ் அடிகளில் அமுதாம்பிகை ஆடும் 

ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் 

ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் 

தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனையே கலிலியோ ஊசல் குறித்த தம் ஆய்வில் "ஊசலின் நீளம் 

குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக 

இருந்தால் மெதுவாக ஆடும் என்றும் கூறியுள்ளார்..

இமைய மலை உயரம்

 

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் வருகைப்பருவப் பாடலில்

 

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே, வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே

 

(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - வருகைப்பருவம்)

 

இப்பாடலில் உள்ள வளர்சிமய இமயம் என்ற சொல் ஒரு செய்தியை 

நமக்குக் காட்டுகிறது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவராகிய 

குமரகுருபரர் எழுதிய இப்பாடலில் இமயத்தினைப் பற்றிக்

 

கூறும் போது வளர்சிமயம் என்று  கூறுகிறார். வளர்சிமயம் என்ற சொல் 

வினைத்தொகையாகும். அதாவது முக்காலத்தையும் உணர்த்தும் சொல். 

இன்றைய அறிவியல் படி  இமயமலை

ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது.  இக்கால அறிவியலின் துணையைக் 

கொண்டு இதுபோன்ற, செய்திகளை நாம் அறிவது எளிதென்றாலும், 

குமரகுருபரர் இமயமலை வளர்வதைப் பாடியுள்ளமை ஆச்சரியம் 

அளிப்பதாகும் .

 

கடல் நீரும் மழையும்

 

கடல் நீரை முகர்ந்து சென்று மேகமாக மாறி மழை பொழியும் என்னும் 

உண்மையை உணர்ந்திருந்தனர் மக்கள் என்பதை பின்வரும் 

முக்கூடற்பள்ளு பாடல் சான்றாக உள்ளதைக் காணலாம். வயிற்றில் உள்ள 

குழந்தையின் வளர்ச்சி முழுமை அடைந்த பின்னரே குழந்தை பிறக்கும் 

என்னும் அறிவியல் செய்தியும் காணப்படுகிறது.

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறுசெங்கண்

மாலாசூர் நன்னாட்டில் மழையுமந்த வண்ணமன்றோ

வேலா வலயமுந்நீர் மேய்ந்துகருக் கொண்டமுகில்

காலான தூன்றியந்தக் காலமுறை காட்டியதே (முக்கூடற்பள்ளு)

 

கடல்நீரை முகந்து சென்று மேகமானது மழை பொழியும் என்னும்

அறிவியல் சிந்தனை குற்றால குறவஞ்சி எடுத்துரைப்பதை

பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

 

ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கும்

மாரிநீர் வளர்தென் ஆரிய நாட்டான்

(திருக்குற்றால குறவஞ்சி 2ஆம் பாடல்)

 

தீக்காயம்

உடலிலே தீப்பட்டு எரிந்து போனால் எரிச்சல் தீர வாழை இலையில் 

கிடத்துவது  மரபு. இது இன்றும் பின்பற்றப்படும் . இதனைத்

 திருக்குற்றாலக் குறவஞ்சியும் எடுத்துரைப்பதைக்க காண முடிகிறது.

அருகில் இருந்து கதைகள் நடத்துவார், எடுத்துமாதர் அணைத்து வாழைக் குருத்தில் கிடத்துவார். (திருக்குற்றால குறவஞ்சி 15 ஆம் பாடல்)

இங்கு வசந்தவல்லிக்கு உடல் வெப்பம் தீர இதனைச் செய்ததை

மேற்கண்ட பாடல் மூலம் அறிய முடிகிறது.


சித்த மருத்துவ முறை

சித்த மருத்துவ முறையை  அக்கால மக்கள் அறிந்திருந்தனர்  

என்பதை

கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர்

(திருக்குற்றால குறவஞ்சி 8ஆம் பாடல்)

 

என்னும் பாடல் வரி உணர்த்துகிறது. சித்தர்கள் சித்த மருந்துகளை

விளைவித்ததை  இப்பாடல் வரி உணர்த்துகிறது.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்