இணையத் தமிழ்ப் பயன்பாடு
இணையத் தமிழ்ப் பயன்பாடு
இணையம்
என்பது
உலக அளவில் கணினி பல வலை அமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பாகும்.
இது உலகம் முழுவதும் உள்ள கணினிகளை இணைத்து, அவற்றில் உள்ள தகவல்களைப் பரிமாறிக்
கொள்கிறது.
இணைய
வரலாறு
அமெரிக்க இராணுவம் தனது கட்டளைகளையும்
தகவல்களையும்
பிற நாடுகள் அறியாவண்ணம்
பாதுகாக்கவும் பரிமாறிக் கொள்ளவும் எண்ணியது. ஆதற்குச் சார்லஸ் ஹெர்ஸ் பீல்டு
என்பவரை இயக்குநராகக் கொண்டு 1957இல் ஆர்பாநெட் என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
இவ்வமைப்பு எம்ஐடி என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து, புவிப்பரப்பில் பிரிந்து
கிடக்கும் கணினிகளை இணைத்தது. அதன் அடிப்படையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத்
தேவையான தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்தது. ஆய்வின் முடிவில் தகவல்
பரிமாற்றத்திற்காக, 1966 இல் தரவு மாற்றத் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தது.
இத்தொழில்நுட்பம் இராணுவத்திற்கு மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களுக்கும் பயன்பட்டது.
இணையத்தில்
தமிழ்
இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி தமிழ் . 1996இல்
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகிய நான்கு தேசிய
மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் முதலில் அரங்கேறியது.
சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமி சீனக் கணினி
வல்லுநர்களோடு இணைந்து தமிழ்நெட் என்ற எழுத்துருவினை உருவாக்கி இணையத்தில் தமிழ்
இடம்பெறக் காரணமாய் இருந்தார். அவரால்தான் இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி என்ற
பெருமை தமிழுக்குக் கிடைத்தது.
தமிழ்
இணையத்தின் வளர்ச்சி
1996 இன் இறுதியில் உலகமெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமிழ்
எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர்.
கணித்தமிழ்ச்
சங்கம்
இணையத்தில் தமிழ்த் தகவல் பரிமாற்றத்திற்கான முதல் உலக மாநாடு 1997 ஆம் ஆண்டு
தமிழ்நெட் 97 என்ற பெயரில் சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் தமிழ் எழுத்துரு
குறித்துக் கணித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துரையாடினர். 1999 இல்
நடைபெற்ற இரண்டாவது கணினி மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் உருவானது. அவ்வாண்டில்
தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் ஆய்விற்குப்பின் தமிழ் 99 விசைப்பலகை
உருவாக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின் தமிழக அரசு அதனை ஏற்று அரசாணை வெளியிட்டது.
பின்னர் ஒருங்குறிக் கூட்டமைப்பு உலக அளவில் அனைத்து மொழிகளுக்கும் ஒருங்குறி
என்னும் எழுத்துருக் குறியேற்ற முறையை உருவாக்கியது. அவ்வமைப்பில் தமிழக அரசு
தமிழ்மொழிக்கான உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டது.
மின்னஞ்சல்
கணினிகளுக்கிடையே இணைத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே
மின்னஞ்சல் சேவையாகும்.
வலைப்பூ
இணைய வெளியில் வழங்கப்படும் நமக்கான கட்டணமில்லா ஊடகக் களமே வலைப்பூ. ஒரு
குறிப்பிட்ட தனிநபரோ குழுவோ தாம் விரும்பும் வகையில் செய்திகளைத் திரட்டி
படைப்புகளைத் தாமே எழுதி பிற வகைகளில் சேகரித்துப் பதிவு செய்யும் ஊடகமே வலைப்பூ.
இதில் ஒளி ஒளி வசதிகளைப் பயன்படுத்துவது கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிக்கல்விக்கெனத்
தனி வலைப்பூவினை உருவாக்கி
செயல்பாடுகள்
வகுப்பறை வலைப்பூக்களை இணைக்கலாம். அதில்
சிறந்த அனைத்தையும்
பலர் அறியவும் மதிப்பிடவும்
வழங்கலாம்.
விக்கிபீடியாவில்
எழுதுதல்
தமிழ்
விக்கிபீடியாவில் நம் பயனர் கணக்கின்வழியே சென்று
கட்டுரைகளை
எழுதலாம். அது ஒரு கட்டற்ற தகவல்
கலைக்களஞ்சியம்
ஆகும்.
அதில் புனைவு
இலக்கியங்கள் தனிப்பட்ட ஆளுமைகள் குறித்த
கட்டுரைகள்
திறனாய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுத
முடியாது. தகவல்
கட்டுரைகளை எழுதவோ ஏற்கனவே உள்ள
கட்டுரைகளைச்
சான்றுகளின் அடிப்படையில் திருத்தவோ முடியும்.
இணைய
இதழ்களில் படைப்புகள்
இணைய இதழ் என்பது
இணையத்தில் மட்டும் வெளிவரும் .
முழுக்க முழுக்க
இணைய வாசகர்களை மட்டுமே மையமாகக்
கொண்டது.
மேற்கூறியது போன்ற
பல்வேறு தளங்களில் இணையத்தின்
துணையுடன்
ஒருங்குறி (யுனிகோட்) எனப்படும் எழுத்துரு
கொண்டு தமிழை
நம்மால் பயன்படுத்த முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக