காப்பியத்தில் அறிவியல்

 

                காப்பியத்தில் அறிவியல்

காப்பியங்கள்  காப்பிய கால  அறிவியல் செய்திகளைப் பதிவு

செய்துள்ளன.

கம்பராமாயணத்தில் அறிவியல்

 

கம்பராமாயணதில் கம்பர் தன் தொடக்கப் பாடலிலேயே

 

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும்

நீங்கலா அலகிலா விளை யாட்டுடையார் அவர் தலைவர்

அன்னவர்க் கேசர ணாங்களே

 

எனக் கூறியிருப்பது  உலகங்கள் தோன்றி மறைவதைக் குறிக்கிறது.

 

அணுகம்பர்

 

இரணிய வதை படலத்தில் இரணியன் இறைவன் எங்கு உள்ளான்?

என்று பிரகலாதனிடம் கேட்க ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்த சிறு பகுப்பில் அமைந்துள்ளான் என்று விடை கூறுகிறான். அதனை

சாணிறு முளனோர் தன்மை அணுவினை சத கூறிட்ட கோணம்   

உளன்

என்கிறார் கம்பர்.

சிலப்பதிகாரத்தில் அறிவியல்

சூரிய ஒளியினால் தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை  இளங்கோவடிகள்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றதும்

என்று ஞாயிறைப் போற்றுகின்றனர்  குறிப்புகள் உள்ளன.

பெருங்கதை கேணி

தண்ணீர் இறைப்பதற்கும் எந்திரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன . இதனை எந்திரக்கிணறு என்றே

இலக்கியம் கூறுகிறது . இந்த ஆழ்துளைக் கிணறு அக்காலத்தில்

அந்தக்கேணி என்று அழைத்துள்ளனர். பெருங்கதையில்

அந்தக்கேணியை பற்றிய குறிப்பு உள்ளது .

 

அந்தக் கேணியும் எந்திர கிணறும்

அந்தத் கேணியும் வந்துபெயர் கடவி (பெருங்கதை)

என்னும் பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

நீச்சல் குளங்களில் உள்ள பழைய நீரினை நீரை நிரப்புவதற்கு இக்காலத்தில் எந்திரங்கள் பயன்படுத்துவது போல  அக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை பின்வரும் பெருங்கதை  எடுத்துரைக்கின்றது.

நிறைக்குறின் திறைத்துப் போக்குறின் போக்கும்

பொறிப்படை அமைந்த பொங்கு இளவந்திகை (பெருங்கதை)

எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்

அத்தமில் ஆடிய சாந்துக்கழி நீரும் (மணிமேகலை)

 

நீச்சல் குளத்திற்கு எந்திரக்கிணறு, எந்திரவாவி , இலவந்திகை என்ற

பெயர்கள் இருந்ததையும் காண முடிகிறது.

இன்றைக்கு செயற்கை நீர் ஊற்று  இருப்பதை அன்றும் இருந்ததை

பின்வரும் பெருங்கதை பாடல்வரி மூலம் அறிய முடிகிறது.

பாத சக்கரம் ஆறுஎதிர் நீர் தர (பெருங்கதை)

 

பல்வேறு பொறிகளை இயக்கும் முறை  வழக்கில்

 

இருந்துள்ளன.

 

பொறி கெட்ட எந்திரம் போலக்

கண் சோர்ந்து கீழே விழுந்து

தன்னை மறந்து கிடந்தனன் (பெருங்கதை)

சிதர்பொறி எந்திரம் போல சிதர்ந்து

தாரும் பூணு மார்புடையத் துயல்வரச்

சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப (பெருங்கதை)

 திருப்பரங்குன்றத்தில் இருந்த 

சித்திரக்கூடத்தில் கோள்களின் இயக்கம் 

பற்றிய ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

 மக்கள் பலரும் அவற்றைக் கண்டு 

களித்தனர் என்ற செய்தியைப் பரிபாடல் 

பதிவு செய்கிறது.


கொங்குவேளிர் பெருங்கதையில் 

ஓரிடத்தில் கோளரங்கம் பற்றிய செய்தி 

காணப்படுகிறது.

 நாள்மீன்கள் மற்றும் கோள்மீன்கள் இயக்க 

முறைகளைத் தொடர்ந்து கவனித்து 

வருவதற்குரிய எந்திரப் பொறிகள் 

அமைக்கப்பட்டிருந்தன. 

மக்கள் அவற்றைக் கண்டுகளிக்கும் 

வகையில் வான மண்டலத்தை மேலே 

செய்துவைத்திருந்தனர் என்று எழுதுகிறார்.


நாண்மீன் ஒழுக்கும் கோண்மீன் கோப்பும் கரந்துறை கோளொடு நிரந்தவை நிறீஇ அவற்று ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர அரும்பொறி மண்டலம் அகவயின் இயற்றி


(2.58:56-59)


உலக இலக்கியங்களில் கோளரங்கம் 

பற்றிய முதல் பதிவு இது.

 மற்ற நாடுகளில் கிடைக்கின்ற வானியல் 

தொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள் 

கோளரங்கமாகக் கொள்ளத் தக்கனவல்ல.

இடைக்கால இலக்கிய அறிவியல் சிந்தனைகள்

சிந்தாமணியில் சச்சந்தன் கட்டியங்காரனிடமிருந்து காப்பாற்ற விசையையை மயில் பொறி ஒன்று செய்து அதில் ஏற்றி அனுப்பியதாய் வரும் பாடல் வரிகள்  மூலம் அறியலாம்

 

பல் கிழியும் பயினும் துகில் நூலோடு

நல் அரக்கும்  மெழுகும் நலம் சான்றன

அல்லனவும் அமைத்து ஆங்கு எழுநாள் இடைச்

செல்வது ஓர் மாமலில் செய்தனன் அன்றே (சீவக சிந்தாமணி)

 

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் 

வானவூர்தி என்ற சொல்லைப் 

பயன்படுத்திருப்பதைப்  பின்வரும் பாடலடி 

மூலம் காணமுடிகிறது

 

கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு

வானவூர்தி ஏறினள் மாதோ

கானமர் புரிகுழற் கண்ணகி தாவென் (சிலப்பதிகாரம்)

 

சீதையை இராவணன் புஷ்பக விமானத்தில் 

கடத்திச் சென்றபோது

அவ்விமானம் குறிப்பிட்ட தூரம் வரை 

தரையில் ஓடிப் பின் விண்ணுக்கு 

ஏறியதைப்   பின்வரும் பாடலடிகள் மூலம்

அறியலாம்.

 

மண்ணின்  மேல் அவன் தேர் சென்ற

சுவடி எலாம் ஆய்ந்து

விண்னின் ஒங்கியது ஒரு நிலை மெய்உற (கம்பராமாயணம்)

 

பொற்கைப் பாண்டியன் – சிலப்பதிகாரம்

 

பழுதுபட்ட ஓர் உறுப்பை எடுத்துவிட்டு 

வேறொரு உறு பொருத்துதல் என்பது 

இன்றைய மருத்துவ உலகில் காணப்படும்

 ஒன்றாகும்.  இதனைப் பற்றிய 

குறிப்பொன்று சிலம்பில் காணப்படுகிறது. 

பின்வரும் பாடலடி மூலம் அறியலாம்.

 

நாடு விளங் கொண்புகழ் நடுகல் வேண்டித்தன்

ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த

பொற்கை நறுந்தார்ப் புலைத்தோர்ப் பாண்டியன் (சிலப்பதிகாரம்)

 

இதே போன்று நவீன கண் சிகிச்சை பற்றிய சிந்தனை இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

 கண் சிகிச்சை கண்ணப்ப நாயனாரால் 

கையாளப்பட்டுள்ளதைப் 

பெரியபுராணத்தின் மூலம் அறியலாம்.

 

மற்றவர் புகழ்ந்து வார்த்த மருந்தினால் ஆற்றி இருந்த காளத்தி

(பெரிய புராணம்)

இதற் கினி என்கணம் பாலிடந்தப்பி

 

எந்தை யார் கணதிற்கிது (பெரிய புராணம்)

 

சுரங்கப் பாதை

 

இன்றைக்கு நகரங்களில் சாலையைக் கடப்பதற்கு  

 

சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதைக் காண்கிறோம். அதேபோல

 

அக்காலத்தில் அரண்மனையிலிருந்து தப்பிக்கவும்

 

வெளியேறவும் சுருங்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை  

 

பின்வரும் பாடலடிகள் தெரிவிக்கின்றன.

 

முட்டு முடுக்கும் இட்டிடை கழியும் கரப்பறை விதியும் கள்ளப்

பூமியும் (பெருங்கதை)

 

அக்காலத்தில் சுரங்கப்பாதைகளைக் கரப்பறை வீதி, பொய்ந்நிலம்

 

என்றும் கூறுவர்.

 

குறுநீர்க் கன்னல்

 

பகலில் சூரிய ஒளி  நேரத்தைக் கணக்கிட  உதவும். ஒரு கோல்

 

நீளமுள்ள குச்சி அல்லது சிறு கம்பு ஒன்றியை தரையில் நட்டு

 

தண்டின் நிழல் விழும் அளவினைக் கொண்டு பொழுது அறியும்

 

முறை இருந்தது. இரவு நேரங்களிலும் மழைக்காலங்களிலும்

 

கணக்கிடக் குறுநீர்க் கன்னலே உதவும் .  

 

நாழிகை வட்டில்,  நாழிகைத்தூம்பு என்னும் இரண்டு

 

விதமான நாழிகை அறியும் முறை அக்காலத்தில் இருந்துள்ளது.

 

குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் (மணிமேகலை)

 

போன்ற வரிகள் நாழிகை வட்டில் குறித்த செய்திகளைத்

 

தெரிவிக்கின்றன.

 

தாழ்புனற் றாரையும் தமரோடு தருக்கும் நாழிகைத் தூம்பு நறுமலர்ப்

 

பந்தும் (பெருங்கதை)

 

என்னும் வரி நாழிகைத் தூம்பு குறித்த செய்தியைத்

 

தெரிவிக்கின்றது.

 

எந்திரப் பொம்மைகள்

அக்காலத்தில் இருந்தமையைப் நூலில் காண முடிகிறது.  

 

பெரும்பொறிப் பாவை மருங்கி விறீகு முடியு மடியு முறைமையிற்

 

புனைந்து  என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்