காளமேகப் புலவர் - கார்'என்று பேர்படைத்தாய் - தனிப்பாடல்

 

      காளமேகப் புலவர் - கார்'என்று   பேர்படைத்தாய்   

காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்.

இவர் சிலேடைப் பாடல்களைப் பாடுவதில்  வல்லவர்.

இரு பொருள்படவும் நகைச்சுவை தோன்றவும் கவிபாடுவதில் வல்லவர்.

வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த 

மோகனாங்கி என்பவளிடம் காதல் கொண்டார்.

இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ 

சமயத்துக்கு மாறினார்.

மேகங்கள் மழை பொழிவது  போன்று கவிமழை பொழிவதால் இவர் 

காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார்.

சிறந்த ஆசுகவி பாடும் வல்லமை மிக்கவர்.

இரட்டுற மொழிதல், சித்திர மடல் போன்ற பாடல்களை இயற்றியுள்ளார்.  

 

கார்'என்று   பேர்படைத்தாய்     ககனத்து   உறும்போது;

'நீர்'என்று   பேர்படைத்தாய்    கொடுந்தரையில்  வந்ததற்பின்;

வார்ஒன்று    மென்முலையார்     ஆய்ச்சியர்கை   வந்ததற்பின்,

'மோர்என்று   பேர்படைத்தாய்     முப்பேறும்   பெற்றாயே !

 

பொருள்

 

மோர் என்று பெயர் கொண்டிருக்கும் நீரே !  நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருக்கிறாய்.  பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய்.  கச்சையணிந்த இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.  இவ்வாறு கார்,  நீர்மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்