அறிவியலும் மனித வாழ்வும்
அறிவியலும் மனித வாழ்வும்
அறிவியல் என்பது "அறிந்து
கொள்ளுதல் " எனப் பொருள்படும்.
scientia எனும்
இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
அறிந்து கொள்ளுதல் என்று பொருள்படும் .
தொல்காப்பியத்தில் அறிவியல் :
தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்துகிறார்
.
ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத்
தினரே"
-தொல்காப்பியர்.
இதில் தொல்காப்பியர்
மனம் என்று கூறியதே இன்று உளவியல் என்னும்
தனி அறிவியல் துறையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகின் தோற்றம் வானத்திலிருந்து
காற்றும் காற்றில் இருந்து தீயும் தீயில் இருந்து நீரும் நீரிலிருந்து நிலமும்
தோன்றிய நிலையை பரிபாடலின் பாடல் கூறியுள்ளது.
ஐம்பூதங்களின் கூட்டாகவே இவ்வுலகு அமைந்துள்ளன. இதனையே
கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் விளக்குகின்றன
“மண் திணிந்த
நிலனும்
நிலன் ஏந்திய
விசும்பும்
விசும்பு தைவரும்
வளியும்
வளித்தலை இய
தீயும்
தீ முரணிய நீரும்
என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து
இயற்கை (புறம்.2)
தீ, வளி, விசும்பு,
நிலன், நீர் ஐந்தும் (பரி. 3 - 4)
என்ற பாடல் வரிகள் விளக்குகிறன்றன.
“நிலம், தீ, நீர்,
வளி, விசும் பொடைந்தும்
கலந்த மயக்கம்
உலகம் ஆதலின்” (தொல். மரபியல்.
644)
என்ற நூற்பா உலகம் என்று உலகினையும் உலகிலுள்ள
பொருள்களையும்
குறிக்கிறது .
பெருவெடிப்புக் கொள்கை
கதிரவனிலிருந்து
தான் பூமி பிரிந்து நீண்ட காலத்திற்கு நெருப்பு கோலமாக இருந்தது. பின்னர் அதுவே காலப்போக்கில் சிறிது சிறிதாக
குளிர்ந்து பனிப்படலமாக மாறியது. பின்
நெடு நாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்து பல
அறிவியல் உண்மைகளை விளக்குகிறது பரிபாடல். இதனையே இக்காலத்தில் பெருவெடிப்பு கொள்கை என்று
கூறுகின்றனர் அறிஞர்கள்.
ஆண், பெண் தோற்றம்
பெண்ணின்
கருவறையிலுள்ள குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும்,
மூன்றாம் பாலினமாகவும் தோன்றும் காரணத்தை அறிவியல் கூறுகிறது. இக்கருத்தைத் திருமூலர்,
“பூண்பது மாதா பிதா வழிபோலவே
ஆம்பதி செய்தான்
அச்சோதி தன் ஆண்மையே” (திருமந்திரம்.461)
“ஆண்மிகில்
ஆணாகும் பெண் மிகில் பெண்ணாகும்
பூண் இரண்டும்
ஒத்துப் பொருந்தில் அலியாகும்” (திருமந்திரம்.462)
என்று
கூறியிருப்பது உடல் சாய் அறிவியல் அறிவைக் குறிக்கிறது. குழந்தைகள் மந்த புத்தியுடனும்,
ஊனமாகவும் , குருடாகவும் பிறப்பதற்கான காரணத்தையும் திருமந்திரம் கூறுகிறது.
மருத்துவ அறிவியல்
கருப்பை அறுவைமுறை
கொங்கு
மண்டலச் சதகம் (92) பாடல் வசந்தபுரத்தை ஆண்ட வேந்தன் மகள் பிரசவ வேதனையில்
துடிப்பதைப் பார்த்து நறையூர் மருத்துவச்சி வயிற்றைக் கிழித்து குழந்தையை
எடுத்தாள். அவள் தன் மருத்துவத் திறமையால் குணப்படுத்தினாள் என்பதைக் கூறுகிறது.
செயற்கை உறுப்பு
உட உடலில்
உள்ள பழுதான ஓர் உறுப்பை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக மற்றொரு உறுப்பை பொருத்துதல்
என்பது இன்றைய அறிவியல் சார்ந்த மருத்துவ உலகில் மிகவும் சாதாரணமான நிகழ்வு இதனை
பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது பொற்கை பாண்டியன் எனும் மன்னன்
தன்னுடைய கையை இழந்தபின் அதற்கு பதிலாக பொன்னாளான கையை பொருத்திக் கொண்டதாக கூறுகிறது.
ஊசியைக் கொண்டு உடலை தைத்தல்
பதிற்றுப்பத்தில்
ஓர் இடத்தில் போரில் வெட்டுண்டு காயம்பட்ட உடலை வெள்ளூசி கொண்டுத் தைத்த மருத்துவச் செயலை விளக்குகிறது. அதோடு காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
என்பவரின் பாடல் வெட்டுண்டு கிழிந்த உடலின் தசையினைத் தைத்து மருந்து ஊட்டி அப்புண்ணின் மேல் பஞ்சினை
வைத்து சிகிச்சை அளித்தமையையும் நமக்கு கூறுகின்றது.
திருவள்ளுவமும்
நாடி
பார்த்தலும்
நோயை ஆராய்ந்து,
நோய் உண்டாக காரணமான மூலத்தைக் கண்டுபிடித்து
, நோய் தீர்க்கும் வழி வகைகளை ஆராய்தல்,
நோய் தீரும் வகையில் செயல்படுதல் என்பவற்றை மருத்துவக் கூறுகள் என்று திருக்குறள்
கூறுகின்றது. இம்முறைகளையே மருத்துவ உலகம்
இன்றும்பின்பற்றுகிறது.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்”
என்றார்.
ஆழ்கடல் அறிவியல்
நீரை அதன் அளவில் இருந்து சுருக்க முடியாது என்பதனை
“ஆழ அமுக்கி
முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது”
என்ற ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொருத்து அழுத்தம்
மிகுகின்றது என்ற உண்மையையும் ஒளவை எடுத்துரைக்கிறார்.
நீரைத் தேக்கி வைக்கும் தொழில்நுட்பம்
நீர் நிலைகள்
வளைவாக அமைந்தால் நீரினை மிகுதியாக சேமிக்கலாம் என்பதை 8 ஆம் பிறை
நிலவைப் போல இருக்க வேண்டும் இத்தொழில் நுட்பத்தைப் அறிந்திருந்தனர் என்பதை
“எண்ணாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்
சிறுகுளம்” (புறம். 118)
என்ற வரிகள் மூலம் அறியலாம்.
கல்லணை
வேந்தன்
கரிகாற்சோழனின் கல்லணை ஆற்றின் குறுக்கே நாக வடிவில் கட்டப்பட்டுள்ளது. பல
நூற்றாண்டுகள் ஆகியும் திடமாக உள்ள கல்லணை பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சிறந்த
சான்றாகும். இது போன்றே அணைக் கட்டுகள் கற்சிறைகள் என்றழைக்கப்பட்டன.
“வருந்திக் கொண்ட வல்வாய் கொடுஞ்சிறை” (அகம். 346: 9)
அணுவைப் பிளத்தல்
அணு என்பது சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறிய மூலக்கூறு ஆகும். ஆனால் இதனைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த ஔவை அறிந்திருந்ததும் அணுவை பிளப்பதைக் குறித்தும் தன்னுடைய பாடலில் பாடி இருப்பதும் இங்கு
குறிப்பிடத் தகுந்தது. அணுவைப் பிளந்து ஏழ் கடலை புகட்டி குறுகத்
தரித்த குறல்
என்று கூறுகிறார் அவ்வையார் .
வான ஊர்தி
இன்று ஆளில்லாத
விமானங்கள் இயக்குவது பற்றியும் மகிழுந்துகளை இயக்குவது பற்றியும் நாம் அன்றாடம்
கேட்ட வண்ணம் இருக்கிறோம். ஆனால்
அக்காலத்தில் முதுகண்ணன் சாத்தன் என்பவர் ஆளில்லாமல் இயங்கும் விமானம் பற்றி
கூறியுள்ளார். வலவன் ஏவா வான ஊர்தி
என்பதிலிருந்து
அந்த வான ஊர்தி இயக்குபவன் இல்லாமல் இயங்கக்கூடியது என்பது புலனாகிறது.
கண்ணகி தன்னுடைய கணவனுடன் வான ஊர்தியில் ஏறினால் என்னும்
செய்தியையும் வானவூர்தி ஏறினள் மாதோ என்ற அடிகள் மூலம் சிலப்பதிகாரம் நமக்கு
தெளிவாக விளக்குகிறது.
சீவக சிந்தாமணியிலும் கட்டியக்காரன் போருக்கு வந்ததால்
சச்சந்தன் தன் மனைவி விசையை காப்பாற்ற அவளை மயில் பொறியில் ஏற்றி அனுப்பிய செய்தியும்
காணப்படுகிறது.
.
கருத்துகள்
கருத்துரையிடுக