தம்பிக்கு - மு வ-தமிழ்ப்பற்று
தம்பிக்கு - மு வ-தமிழ்ப்பற்று
தம்பிக்கு என்னும் தலைப்பில் மு வ அவர்கள் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார்
அதில் நமக்கு பாடத்திட்டமாக இருப்பது எழில் என்பவருக்கு எழுதிய மற்றொரு
கடிதம். அதில் மு வ வளவன் எனும் பெயரில் எழுதிய கடிதங்கள் அனைத்தும் மிகவும்
மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றன. எழிலுக்கு எழுதிய இந்த
இரண்டாம் கடிதத்தில் எழிலின் தமிழ்ப் பற்று பற்றி பேசுகிறார்.
தமிழ்ப்பற்று
வளவன் தான் ஒரு சர்வாதிகாரியாக ஆகும் நிலை ஏற்பட்டால்,
1.திருக்குறள் ஓதிதான் திருமணம் தமிழ்நாட்டு நடக்க வேண்டும் அப்படி நடக்கும் திருமணங்கள் மட்டும்தான் செல்லுபடி ஆகும் என்றும்,
2.தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ் மறைகளை ஓதாத கோயில்கள் தமிழ்நாட்டில் திறந்தே இருக்கக் கூடாது என்றும்,
3.தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும்,
4.தமிழ்நாட்டு கவர்னர் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணையிடுவேன் என்று எழுதியிருக்கிறான்.
வீண் கனவு
உன்னுடைய கனவு வீண்கனவு என்று சொல்கிறார் . உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன் ஆனால் உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது அது என்றைக்காவது ஒரு நாள் வடிந்து வற்றிவிடும் . வற்றாத ஊற்று நம் உள்ளத்தில் இருக்கட்டும் செயல்திறன் வளரட்டும் என்று கூறுகிறார்.
வீண் கனவு என்று குறிப்பிட காரணம்:
நான் வீண் கனவு என்று ஏன் குறிப்பிடுகிறேன் தெரியுமா? திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும், தமிழ்நாட்டு கோயில்களில் உத்தமர்களின் தமிழ் பாட்டுகள் முழங்க வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இடவேண்டும் எனும் இவைகளை ஒருகாலும் வீண் கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். தமிழுக்கோ தமிழ் நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் மட்டும்தான் இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறை கூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறிப்பிடுவான் ஆனால் அவனை பகைவன் என்று ஒதுக்குவது நமது கடமை. கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்து இருந்து மாநாடு செய்வான் பகை என்று திருவள்ளுவர் ஆணையிட்டது இப்படிப்பட்ட பகைவர்களைக் கருதித்தான் வீண் கனவு என்று கூறுவதாகக் கூறுகிறார். .
.
பெரும் குறை
தமிழர் ஆகிய நம்மிடம் பெரும் குறை ஒன்று உள்ளது. அது பிறருடைய சொல்லால் மயங்கும் பேதமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டுதான் உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்த பேச்சை தமிழரிடம் ஒருவர் பேசட்டும் . அந்தப் பேச்சைக் கேட்ட தமிழர் உடனே தமிழ்ப் பற்றை வெறுப்பார். எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்க்கையை தொடங்கி வாழத் தொடங்கி விடுவார். காரணம் தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாக பண்பட்டு வந்தது. அதனால் சொல்கிறவர் யார் உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா என அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல் அவர் அவ்வாறு வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் உடனே தாம் அந்தக் கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவார்.
ஏமாந்த வாழ்வு
சொல்லப்பட்ட உண்மையை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லது தான். சொன்னவர் யார் ஆனால் சொன்னவர் யார் அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் ஏமாந்த வாழ்வு தான் வாழ வேண்டும் . இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக்கொண்டு ஒன்றில் நன்மை செய்து மற்றொன்று நஞ்சு ஊட்டி விடுவார்கள். சாதி வேறுபாடு முதலியவை ஒழிய வேண்டியதுதான் ஆனால் அதை நமக்கு எடுத்துச் சொன்னவர் சாதிப்பித்தராக இருந்தால் அதையும் நினைவில் வைத்துக்கொண்டு வாய்க்கும் வாழ்க்கைக்கும் உறவு வைக்காமல் பற்றின்றி வாழ வல்லவர் அவர் என்பதை தெளிய வேண்டும். இந்த தெளிவு இருந்தால் அவரே மற்றொரு நாள் பொய் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது.
ஆராய்ச்சி:யாளின் கொம்பு வளைவானது அம்பு நேரானது
கொள்கை எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் சொல்பவர் யார் என்று
ஆராய்ச்சி செய்ய வேண்டும். யாளின் கொம்பு வளைவானது அம்பு நேரானது ஆனால் யாழை வெறுத்து அம்பைப் போற்றுவது அறியாமை அல்லவா. திருவள்ளுவர் தான் இந்த உவமையை சொன்னவர் வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம் அதை கொண்டு ஒருவரை நம்பி விடக்கூடாது அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகு நம்ப வேண்டும் குறுகிய நோக்கம் வேண்டாம் என்று நமக்கு சொல்கிறவர்கள் நம்மை விட பரந்த நோக்கம் உடையவர்களா என்று பார்க்க வேண்டும் .
வல்லரசுகளிடம்
வல்லரசுகளிடம் சென்று அவர்கள் அந்த உபதேசம் செய்யட்டும் நாட்டுப்பற்றையும் இனபற்றையும் பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப்பற்று அங்கே ஒழிந்ததும் தமிழன் தன் முதல் பாடத்தை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழைய பொதுப் பாடத்தை வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட தயங்க மாட்டான்.
போலி உபதேசம்
போலி உபதேசம் ஏமாற்றும் நோக்கமுடையது ஆகும். செல்வந்தன் தன்னுடைய இரும்புப் பெட்டியை ஏழு எட்டு சாவிகளால் பூட்டி அந்த அறையையும் சில பூட்டுக்களால் பூட்டிவிட்டு தன் மாளிகையை முன் தூரத்தில் அகலமான திண்ணைமேல் சாய்ந்து கொண்டு எதிர்வீட்டு ஏழையைப் பார்த்து டேய் என்னடா எப்போது பார்த்தாலும் அந்தப் பொத்தல் கதவை மூடியே வைத்திருக்கிறாய் எங்கள் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்பது போல் இருக்கிறது . அந்த ஏழையும் அவருடைய பரந்த நோக்க பேச்சைக் கேட்டு மயங்கி தன் குடிசைக்கு இருந்த ஒரே ஒரு கதைவை எடுத்து அப்பால் வைத்தான் என்றால் அவனைப் பேதை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது தமிழர்கள் அப்படிப்பட்ட பேதைகள் ஆகக்கூடாது என்பதுதான் தன்னுடைய கவலை என்கிறார்.
உலகம் ஒரு குடும்பமாய் அன்பாக வாழ கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்கு தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் கடமை தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல தமிழரின் கடமை கோவில்களில் தேவாரம் முதலிடம் முழங்குவது கனவு அல்ல அந்த கோயில்களை தமிழால் பாடி அவற்றின் பெருமையை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வோடு ஆற்ற வேண்டிய கடமை எது? அதிகாரிகள் தமிழில் எழுத வேண்டியதும் கனவு அல்ல காந்தியடிகளின் கருத்துப்படி மொழிமாறி மாகாணம் கட்டாயமாக ஏற்படும் போது கவர்னர் தமிழில் கையெழுத்து விடுவதும் கனவு அல்ல வங்காளத்திற்கு தொண்டு செய்யச் சென்ற முதுமையில் எழுபத்து எட்டாம் வயதில் அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தை கற்றுக்கொண்ட காந்தியடிகளின் பெருந்தன்மையான நெறி எது ஆகவே இன்று தமிழருக்கு வேண்டியது என்று தெளிவு படுத்துகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக